‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் வில்லிக்கு கிடைத்த ஜாக்பாட்.! புது சீரியலில் ஹீரோயின் ஆன நடிகை.!

வெளியிட்டது

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. புது சீரியல் ஒன்றில் அவர் ஹீரோயினாக களமிறங்க இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் வில்லன் அர்ஜுனனின் அக்காவாக ஜெயந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுவாதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் வில்லிக்கு கிடைத்த ஜாக்பாட்.! புது சீரியலில் ஹீரோயின் ஆன நடிகை.! 1
தனது தம்பி அர்ஜுனுடன் சேர்ந்து வில்லத்தனங்களை செய்வதும், அவருக்கு பக்கபலமாக இருந்து ஐடியாக்களை கொடுத்து வில்லத்தனங்களை வெளிப்படுத்தி வருகிறார். இவரை மக்கள் பெரிதும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘சக்தி ஐபிஎஸ்’ என்ற புது நாடகம் ஒன்றில் அவர் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி இருக்கிறார். நகரத்தில் பிறந்த பெண் ஒருவர் தனது ஐபிஎஸ் கனவை எவ்வாறு நிறைவேற்றுகிறார்? அதை நிறைவேற்றுவதற்கு அவர் சந்திக்கும் தடைகள் என்ன? என்பது குறித்து இந்த நாடகத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


சில நாட்களுக்கு முன்பு இந்த நாடகத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தற்போது முதல் ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பிரபல இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பொதிகை தொலைக்காட்சியில் ஜனவரி 19ம் தேதி முதல் இந்த நாடகம் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரபல நடிகை சுகன்யா இந்த நாடகத்தில் செவிலியர் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: DD Pothigai

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்