தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தர்ஷனா ஸ்ரீபால் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். இது தமிழும் சரஸ்வதியும் சீரியலின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வசுவின் ரசிகர்கள் பலரும் இந்த முடிவை மாற்றுமாறு தர்ஷனாவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாடகங்களில் எத்தனையோ துணை கதாபாத்திரங்கள் அல்லது சப்போர்ட்டிங் கதாபாத்திரம் இருந்தாலும் நம்ம மனதிற்கு பிடித்த சில நடிகர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நல்ல கதாபாத்திரத்துடன் இருக்கும் ஒரு நடிகை என்று சொன்னால் அது தர்ஷனா தான். வசுந்தரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், இளைய மருமகளாக இருக்கும்போதிலும் மூத்த மருமகள் சரஸ்வதியிடம் இவர் காட்டும் அன்புக்காகவும், தனது தாய் சந்திரகலா என்ன தவறு செய்தாலும் அதை முகத்துக்கு நேராக கேட்டுவிட்டு, தன் புகுந்த வீட்டிற்க்காக இவர் பேசும் வசனங்களும் வசுந்தராவை குறுகிய காலத்திலேயே பலருக்கும் பிடிக்க வைத்தது.

இன்னும் சொல்லப்போனால் லீட் ரோலில் நடித்து வரும் சரஸ்வதி கதாபாத்திரத்தை விட வசுவின் கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமான கதாபாத்திரமாக இருந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் தர்ஷனாவின் நடிப்பு தான். இந்த நிலையில் தற்போது தர்ஷனா சீரியலை விட்டு விலகியிருக்கும் இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது .தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து வசுந்தரா விலகி விட்டதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. சில நாட்களாகவே முக்கிய தொடர்களில் இருந்து ஒவ்வொரு நடிகராக விலகி வருவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் சீரியல்கள் என்றால் ஒரு வருடம், இரண்டு வருடம் வரை ஓடும். பின்னர் அதை முடித்துவிட்டு வேறு கதையை எடுப்பார்கள். ஆனால் தற்போது எல்லாம் மெகா சீரியல்கள் என்ற பெயரில் ஐந்து வருடங்கள் வரை நாடகங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் பலரும் தங்களது கேரியரை பார்ப்பதற்காக நாடகங்களில் இருந்து விலகி அடுத்தடுத்த சேனல்களுக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. இது சீரியல் ரசிகர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் முல்லை மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரங்கள் வரை மட்டும் மூன்று முறை மாற்றப்பட்டிருக்கிறது.
கதை இல்லை என்றால் நாடகத்தை தயவு செய்து முடித்து விடுங்கள் வழவழவென்று இழுத்து ஆட்களை மாற்றி நாடகத்தை எங்கெங்கோ திசை திருப்பாதீர்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து சின்னத்திரை இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி விலகுவதாக அறிவித்திருந்தார். அடுத்ததாக வசுந்தரா தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் விலகலுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது தற்போது கதைப்படி வசு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். குழந்தைக்கு தாயாக நடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்ட்ஸில் தமிழும் சரஸ்வதியும் டீமுக்கு எந்த அவார்டும் கிடைக்காமல் இருந்திருக்கிறது. மேலும் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் என்கிற கேட்டகிரியில் தர்ஷனாவுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருக்கு விருது கிடைக்கவில்லை.
இதனால் கோபமான அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது இதே காரணம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் கோபிக்கும் கூறப்பட்டது. கதைக்கு வலு சேர்க்கும் கதாபாத்திரங்களுக்கும், சேனலின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு உதவும் நடிகர்களுக்கும் விருது வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், பாக்கியலெட்சுமி சீரியலின் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஷும், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷனாவும் விலகி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.