சினிமா உலகம் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். நடிப்பிற்காக எந்த அளவிற்கும் சென்று ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார். பல படங்களில் இவர் தனது உடலை வருத்தி நடித்து உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்த விக்ரம், தற்போது ஹிட் படம் கொடுப்பதற்கு தடுமாறி வருகிறார். இவருக்கு கடைசியாக வெளியான கோப்ரா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் விக்ரமை மீண்டும் பழைய இடத்திற்கே கொண்டு சென்று விட்டது என்றே சொல்லலாம். இதனால் அடுத்தடுத்த கதைகளை கேட்டு விக்ரம் மும்முரமாக நடித்து வருகிறார். அதன்படி இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் பார்வதி , மாளவிகா மோகனன் , பசுபதி என பலரும் நடித்து உள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இருப்பினும் 100கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற வார் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்த நிலையில் தற்போது வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL