Categories: சினிமா

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குனரின் அடுத்த படைப்பு.! ‘தி பாய்ஸ்’ டீசர் இதோ.!

வெளியிட்டது

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கி நடித்திருக்கும் ‘தி பாய்ஸ்’ படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 5 பேச்சுலர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ போன்ற படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே அடல்ட் கண்டெண்டு படங்களாக இருப்பதாக இவர் மீது விமர்சனம் எழுந்தது. இனிவரும் படங்களை அடல்ட் கண்டண்டு படங்களாக எடுக்க மாட்டேன் என்று இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிறிய இடைவேளைக்குப் பின்னர் தற்போது இவர் இயக்கியிருக்கும் படம் தான் ‘தி பாய்ஸ்’. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட இயக்குனரின் அடுத்த படைப்பு.! 'தி பாய்ஸ்' டீசர் இதோ.! 1
இந்தப் படத்தில் ஐந்து திருமணமாகாத இளைஞர்களுக்கு இடையில் நடக்கும் கலகலப்பான காமெடி சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர். இந்தப் படத்தில் சந்தோஷுடன் இணைந்து கலக்கப்போவது யாரு வினோத், ஜெயிலர் ஹர்ஷத், ஷா ரா, யுவராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அகமது ஷெரிஃப் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் மற்றும் கௌதம் என இரண்டு இசையமைப்பாளர்கள் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கின்றனர். ‘நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரிப்பாளர் செந்தில்குமார் மற்றும் சந்தோஷ் பி ஜெயக்குமாரின் சொந்த நிறுவனமான ‘டார்க் ரூம் பிக்சர்ஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர்.

இந்த படம் குறித்த பேசிய இயக்குனர் சந்தோஷ், “5 பேச்சுலர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் இந்த கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஐவரும் தங்களது இளமைக்காலத்தில் தவறான பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள்.
அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடந்தது? என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினர். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் கிடையாது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தற்போது படுகினர் வெளியிட்டிருக்கின்றனர். இளைஞர்களிடையே வரவேற்பை பெற்று வரும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Divo Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்