நடிகர் விஜய் தேவார கொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவார கொண்டா. 2011ம் ஆண்டு ‘நுவிலா’ என்கிற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய நடிகராக உயர்ந்தார். இவருக்கு திருப்பு முனையை கொடுத்த ஒரு திரைப்படம் என்று சொன்னால் அது ‘அர்ஜுன் ரெட்டி’ தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ‘கீதா கோவிந்தம்’ என்கிற படத்தின் மூலமாக இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறிப் போனார். அதன் பின்னர் இவர் ‘நோட்டா’, ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்ப விமானம்’, ‘லைகர்’, ‘குஷி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் தற்போது கைவசம் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்கிற படத்திலும் தனது 12வது படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். இதில் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்கிற திரைப்படம் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தையும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் தேவார கொண்டாவுடன் இணைந்து மிருனாள் தாக்கூர் நடித்திருக்கிறார். இந்த படத்தை பரசுராம் என்பவர் எழுதி இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் வருகிற ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த டீசர் வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Dil Raju