2021-ல் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்! உள்ளாட்சித் தேர்தல் எங்களது நோக்கம் இல்லை!! கமல்ஹாசன் திட்டவட்டம்

2021-ல் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம்! உள்ளாட்சித் தேர்தல் எங்களது நோக்கம் இல்லை!! கமல்ஹாசன் திட்டவட்டம் 1

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதில்லை என்று அக்கட்சியி்ன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்றும் இந்த உண்மை அனைவரும் அறிந்தது தான் என்றும் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் முன்னேற்றம் எதுவும் கிடைக்காது என்றும் தவணை முறையில் மாற்றத்தை பெறுவதில் எந்த சாதனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதை லட்சியமாக கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்படும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment