இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6%

வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவிகிதமாக இருக்குமென பிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6% 1
சரியும் இந்திய பொருளாதாரம்

பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவடைந்துள்ளது.

உலக நிறுவனங்கள் மற்றும் பல அறிஞர்கள் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதை கணித்துள்ளனர். ஆனால் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதனை ஏற்றக்கொள்ளவில்லை.

தனது பட்ஜெட் உரையில் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதத்தை எட்டும் என கூறினார். அதுமட்டுமின்றி தற்போதுள்ள பட்ஜெட் நிதி திரட்டுவதற்கானது என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

வரும் 2021-2022-ஆம் நிதி ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் பொதுக் கடன் 70 சதவீதத்தை நெருங்கிவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த ஃபிட்ச் நிறுவனத்தின் பாா்வையை மாற்றியமைக்கும் வகையிலான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் 4.6 சதவீதம் என்ற அளவில் காணப்படும் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வரும் நிதியாண்டில் 5.6 சதவீதம் அளவுக்கே உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் 2019-20-ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாக இருக்கும் எனவும், இது 2020-21 இல் 6 முதல் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், ஃபிட்ச் நிறுவனத்தின் கணிப்பு அதைவிட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்