Categories: சினிமா

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்த நீலாம்பரி.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

வெளியிட்டது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்ற புதிய வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் தலைவர் 169. இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிப்பார்கள் என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளது சன் பிக்சர்ஸ். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த கடைசியாக வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் சரியாக ஓடாத காரணத்தினால் சூப்பர் ஸ்டார் அவர்கள் அடுத்த படத்தை மிக கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்காக அவர் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி படங்களை எடுத்த நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து இருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்த நீலாம்பரி.! வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு 1

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை இயக்கி கொண்டிருந்த போதே சூப்பர் ஸ்டாருடன் நெல்சன் இணைந்து தலைவர் 169 படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் பீஸ்ட் படம் வெளியான போது எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எனவே சூப்பர் ஸ்டார் நெல்சன் உடன் இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திரைக்கதை வடிவமைப்பதற்காக கேஎஸ் ரவிக்குமாரையும் படத்தில் இணைக்க இருப்பதாகவும் தகவல்கள் கொடி கட்டி பறந்தன. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கி நெல்சன் உடன் இணைந்து சூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தின் குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக முதலில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பின்னர் திரிஷா நடிக்க இருப்பதாகவும் பல யூகங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகம் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு. 23 ஆண்டுகளுக்கு முன்பு படையப்பா படத்தில் நீலாம்பரியாகவும், படையப்பாவாகவும், ரம்யா கிருஷ்ணனும் ரஜினியும் நடித்திருந்தனர். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண…Watch the below Video..

Twitter Original Source From: Sun Pictures

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்