Categories: சினிமா

6 ல இருந்து 60 வரை..எல்லாரும் என்ன ரசிக்கிறாங்க.! செம்ம ஹாப்பி மூடில் அண்ணாச்சி போட்ட ட்வீட்

வெளியிட்டது

கடந்த வாரம் ஜூலை 28ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது தி லெஜன்ட் திரைப்படம் சரவணா செல்வரத்தினம் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் வாரிசாக இருப்பவர் அருள் சரவணன். இவர் சென்னையில் சரவணா ஸ்டோர் என்ற கடையின் உரிமையாளராக இருக்கிறார். ஆரம்பத்தில் தனது கடையின் விளம்பரங்களில் நடித்து வந்த அருள் சரவணன், பின்னாளில் படத்தில் நடிக்கும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுத்தாலா நடித்துள்ளார். இதில் சின்ன கலைவாணர் விவேக், சுமன், நாசர், பிரபு, யோகி பாபு, லட்சுமி ராய், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தை தயாரிக்க யாரும் முன் வராத காரணத்தினால், சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்று தயாரிப்பு கம்பெனியை உருவாக்கி இந்த படத்தை தயாரித்துள்ளார் அருள் சரவணன்.

6 ல இருந்து 60 வரை..எல்லாரும் என்ன ரசிக்கிறாங்க.! செம்ம ஹாப்பி மூடில் அண்ணாச்சி போட்ட ட்வீட் 1

ஜேடி – ஜெர்ரி என்ற விளம்பரங்களை இயக்கி வந்த இரண்டு இயக்குனர்களை வைத்து இந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருட்ச் செலவில் இயக்கியுள்ளார் அருள் சரவணன். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா மூவியாக வெளியாகி இருக்கும் படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே இரண்டு கோடி என்றும் தற்போது நான்கு நாட்களை கடந்துவிட்ட நிலையில் மொத்த வசூல் 12 கோடி என தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. வெளிநாட்டில் படிக்கும் சிறந்த விஞ்ஞானியான அருள் சரவணன், தனது அறிவை தன்னுடைய சொந்த மக்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊருக்கு வந்து சர்க்கரை நோய்க்கு குறைந்த விலையில் மருந்து கண்டுபிடிக்கிறார். அதை எதிர்க்கும் மெடிக்கல் மாஃபியாக்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் பட்ஜெட் மட்டுமே 100 கோடியை நெருங்கிய நிலையில், இசை வெளியீட்டு விழாவில் நடத்த பிரம்மாண்ட செலவு என 150 கோடிக்கு மேல் செலவு செய்து இந்த படத்தை வெளியிட்டுள்ளார் அருள் சரவணன். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், தற்போது அருள் சரவணன் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் இந்த படத்தை மிக ரசித்துப் பார்ப்பதாகவும், தியேட்டர்களில் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை நீங்களும் அருகில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்றும் அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றே போட்டுள்ளார். படத்தில் ஹீரோயினாக நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தோலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து, அண்ணாச்சியுடன் நடித்ததில் ரொம்ப ஹேப்பி என்று பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தின் முதலமைச்சராக கூட அண்ணாச்சி வருவார் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்து வருகிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்