Categories: சினிமா

வசூலை குவித்துள்ள லெஜெண்ட் படம்..முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்

வெளியிட்டது

ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் சரவணன் அருள் அறிமுகமான தி லெஜெண்ட் படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுதோலா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சுமன், விவேக், யோகி பாபு, நாசர், ரோபோ சங்கர் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி இருந்தது. உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் வெளியாகியிருந்தது. பான் இந்தியா மூவியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது, படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

வசூலை குவித்துள்ள லெஜெண்ட் படம்..முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல் 1

படத்தை பற்றி விமர்சனம் செய்தவர்கள், சரவணன் அருளின் மேக்கப் அதிகமாக இருந்ததாகவும், அவருக்கு நடிப்பே வரவில்லை என்றும், எல்லா இடத்திலும் ஒரே ரியாக்சன் தான் கொடுத்தார் என்றும் பலர் அவரை விமர்சித்து வந்தனர். முதல் முயற்சியிலேயே இவ்வளவு தூரம் தனது உழைப்பை கொடுத்திருக்கிறார் அவரை பாராட்டியாக வேண்டும் என்று சிலர் அவரை பாராட்டியும் வருகின்றனர். படத்தின் கதையை பொருத்தவரை அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் சரவணன் அருள், தனது சொந்த ஊருக்கு வந்து அங்கு சர்க்கரை நோயால் அவதிப்படும் மக்களுக்கு குறைந்த விலையில் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க முற்படுகிறார். அப்போது மெடிக்கல் மாஃபியாக்களால் அவர் எவ்வாறு துன்பப்படுகிறார், தடைகளை மீறி எவ்வாறு அவர் வெற்றி பெறுகிறார் என்பது குறித்த படம்தான் தி லெஜன்ட்.

படத்தின் கதை புதிய முயற்சியாக இருந்த போதிலும், படத்தின் நீளம் மற்றும் தேவையில்லாத இடங்களில் பாடல்கள் போன்றவை மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தின. பல பேர் அவர் சீரியஸான காட்சிகளின் நடிக்கும்போது, சிரித்து கைதட்டிக் கொண்டிருந்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் படத்தின் வசூல் பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல் நாளே இரண்டு கோடி வசூலை அள்ளியிருக்கிறது தி லெஜென் படம். உலகம் முழுவதிலும் 6 கோடி வசூலை அள்ளியிருப்பதாக வெளியானது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்