“போட்டோவை வைத்து கின்னஸ் சாதனை செய்த ரோஜா”!!”குவியும் பாராட்டுக்கள்”!!

பல்வேறு வகையிலான விஷயங்களுக்கும் புது மாதிரியான செயல்களை செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தி வருவோர் அதிகம். சாப்பிடுவது முதல் தூங்குவது வரை என்னன்னே விதமாக சில புதிய விஷயங்கள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து வருபவர்கள் அதிகம். இப்பொது அது போன்ற பல சாதனைகளை கின்னஸ் நிறுவனம் ஆதரித்து வருகிறது. அப்படி ஒரு புது விதமான சாதனையை தான் நடிகையும், ஆந்திர மாநில எம்.எல்.ஏ’வுமான ரோஜா நிகழ்த்தி பலரின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

"போட்டோவை வைத்து கின்னஸ் சாதனை செய்த ரோஜா"!!"குவியும் பாராட்டுக்கள்"!! 1

விளம்பரம்

இப்பொது ஆந்திராவில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியின் முக்கிய பிரமுகராக இருப்பவர் நடிகை ரோஜாவை பற்றி அறிந்திராத தென் இந்திய மக்கள் குறைவே. ஆந்திர மாநிலம் திருப்பதியை பூர்விகமாக கொண்ட நடிகை ரோஜா தெலுங்கு சினிமாவில் மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் முதலில் அவருக்கு ஹிட் அடித்த படம் தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான “செம்பருத்தி” படம் தான். இதில் தான் நாயகன் பிரஷாந்தும் அறிமுகமானார். ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

தொடர்புடையவை  நீ யாரு என்கிட்ட கேள்வி கேட்க..?கத்திய வனிதா..!செய்வது அறியாமல் முழித்த தேவயானி!!!

"போட்டோவை வைத்து கின்னஸ் சாதனை செய்த ரோஜா"!!"குவியும் பாராட்டுக்கள்"!! 3

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், அர்ஜுன், சரத்குமார், சத்யராஜ் போன்ற அப்போது முன்னணியில் இருந்த பிரபல நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக இருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நாயகியாக இருந்த இவர் அங்கும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சில மலையாள, கன்னட படங்களில் தோன்றியுள்ளார்.

"போட்டோவை வைத்து கின்னஸ் சாதனை செய்த ரோஜா"!!"குவியும் பாராட்டுக்கள்"!! 5

விளம்பரம்

3 முறை நந்தி அவார்ட், ஒரு தமிழ் நாடு ஸ்டேட் விருது வென்றுள்ள இவர் இப்பொது மற்றொரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். ஆந்திராவிலுள்ள புகைப்பட கலைஞர்கள் சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்டுள்ள நடிகை ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 பேர் புகைப்படம் எடுக்க, ஒரே நேரத்தில் அதிக பேரால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தி அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

"போட்டோவை வைத்து கின்னஸ் சாதனை செய்த ரோஜா"!!"குவியும் பாராட்டுக்கள்"!! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment