Categories: சினிமா

தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது ‘தி லெஜண்ட்’ திரைப்படம்.

வெளியிட்டது

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்துள்ள படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தயாரித்து நடித்துள்ள திரைப்படம்தான் “தி லெஜண்ட்”. ஜேடி ஜெரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்த படம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. ட்ரைலர் மற்றும் ஆடியோ லாஞ்சை சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார் சரவணன். தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட முண்ணனி நடிகைகள் 10 பேர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் பாடல்களும் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருந்தன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது 'தி லெஜண்ட்' திரைப்படம். 1

ட்ரைலர் 29 மில்லியன் பார்வையாளர்களையும், அடுத்தபடியாக வாடிவாசல் 18 மில்லியன் பார்வையாளர்களையும், பெற்று இருந்தது. இதனால் படம் வெளியாவதற்கு முன்பே தன்னுடைய தடத்தை ஆணித்தரமாக பதித்துள்ளார் சரவணன். படத்தின் ட்ரைலரில் பார்க்கும் போது சரவணன் விஞ்ஞானி, சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். தற்போது படம் வெளியாகும் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி ஜூலை 28ம் தேதி தமிழகமெங்கும் 800 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பல முண்ணனி நடிகர்களின் படங்களை விநியோகம் செய்த விநியோகஸ்தர் அன்புச் செழியனின் கோபுரம் சினிமாஸ் விநியோகம் செய்யவுள்ளார். இந்த படத்தை பார்த்த அவர் மகிழ்ச்சி அடைந்து இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என்று சொல்லி அதிக முன்பணம் கொடுத்து படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருக்கிறார்.

முதல் படமே 800 திரையரங்குகளில், அதிக முன் பணம் கொடுத்து வாங்கப்பட்ட படம் என்ற பெருமையை தி லெஜண்ட் படம் பெறுகிறது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், சண்டை, காமெடி என்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கவரும் விதமாக படம் உருவாகியுள்ளது. இதில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் நடத்துள்ளார். அதுவே அவர் நடித்த கடைசி படம். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. படம் எப்போது வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூலை 28 தேதி வெளியாகும், அதுவும் பிரபல விநயோகஸ்தர் அன்புச்செழியன் மூலம் 800 திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Youtube video code embed credits: Divine Lyrics

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்