Categories: சினிமா

ஐடி ரைடால் செம்ம குஷியில் இருக்கும் அண்ணாச்சி.! வசூலை குவிக்கும் தி லெஜெண்ட் படம்.!

வெளியிட்டது

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது தி லெஜண்ட் படம். இந்த படம் கடந்த மாதம் ஜூலை 28ம் தேதி திரைக்கு வந்தது. அறிமுக நடிகரின் முதல் படம் உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களிலும், தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களிலும் வெளியானது இதுவே முதல்முறை. படம், ஆடியோ லாஞ்ச், ட்ரைலர் வெளியீடு, ப்ரோமஷன் என அனைத்திலும் பிரம்மாண்டம் காட்டியிருந்தார் அண்ணாச்சி. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. ஆரம்பத்தில் பலரும் படத்தை திட்டி தீர்த்து வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று தலைகீழாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் கேலியும், கிண்டலும் செய்தவர்களே இப்போது அண்ணாச்சி படத்திற்கு கூட்டத்தைப் பார்த்து வாயடைத்து போயுள்ளனர். நெகடிவ் கமெண்டுகள் கொடுத்து அண்ணாச்சி படத்திற்கு இலவச பப்ளிசிட்டி தேடிக் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

ஐடி ரைடால் செம்ம குஷியில் இருக்கும் அண்ணாச்சி.! வசூலை குவிக்கும் தி லெஜெண்ட் படம்.! 1

 

படம் வெளியான முதல் நாள் இந்த படத்திற்கு கணிசமான அளவு மட்டுமே கூட்டம் கூடியது ஆனால் அண்ணாச்சியை பற்றியும் படத்தைப் பற்றியும் கேள்விகள் மிக அதிகமானதால் படம் எப்படி இருக்கிறது என்பதை காண பலரும் தியேட்டரில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர் இப்போது பலரும் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர் அதனால் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமான வசூலை அள்ளி குவித்து வருகிறது. இந்த நிலையில் அண்ணாச்சி படம் குறித்த புது தகவல்கள் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அண்ணாச்சியின் படத்தை பைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்து இருந்தது. தற்போது தொடர்ந்து நான்காவது நாளாக மதுரை அன்புச் செழியனின் வீடு மற்றும் அலுவலங்களில் தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முண்ணனி தயாரிப்பாளர்களுக்கு அன்புச் செழியனே ஃபைனான்சியராக இருக்கிறார். இப்போது அவர் வீடு மற்றும் அலுவலங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் அவரிடமும் தற்போதைக்கு எந்தவித பண பரிவர்த்தனைகள் நடத்த முடியாது. இதனால் அண்ணாச்சிக்கு மிகப்பெரிய யோகம் அடித்துள்ளது. அன்புச்செழியனின் வருமான வரித்துறை நிலைமை சீரடைந்தால்தான் சில திரைப்படங்கள் வெளியாகும் என்ற சூழ்நிலை இருப்பதால் இந்த வாரம் வெளியாக இருந்த 4 படங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாரமும் அண்ணாச்சி படங்களுக்கு போட்டியே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற தருணத்தைப் பயன்படுத்தி அண்ணாச்சி வசூலை குவித்துவிடுவார் என்றே தெரிகிறது. அவன் அவன் எடுக்கும் முடிவு அண்ணாச்சிக்கு சாதகமாகவே அமைகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்