Categories: சமூகம்

14 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் வருகிற 25ம் தேதியை மாற்றி 27ம் தேதி விண்ணில் ஏவப்படும்! இஸ்ரோ அறிவித்துள்ளது!!

வெளியிட்டது
14 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் வருகிற 25ம் தேதியை மாற்றி 27ம் தேதி விண்ணில் ஏவப்படும்! இஸ்ரோ அறிவித்துள்ளது!! 1

பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரோ ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

இதனிடையே இதற்கான கவுண்ட்டவுன் வரும் 25-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்