Categories: சினிமா

இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.! வாரிசு படத்தில் இருந்து செம்ம மாஸாக வெளியானது “தீ தளபதி” HD சாங் .!

வெளியிட்டது

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சுமார் 300 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருக்கும் வாரிசு படத்தில் இருந்து தற்போது தெறியான ஒரு பாடலான “தீ தளபதி” பாடலின் முழு வீடியோ சாங் தற்போது வெளியாகி இருக்கிறது. தற்போது படங்கள் உருவாகி வரும் நிலையில் படத்திலிருந்து முதலில் லிரிக்ஸ் வீடியோ என்ற பெயரில் பாடல்கள் வெளியிடப்படுகிறது. பின்னர் சில நாட்கள் கழித்து டீசரும், படம் வெளியாகும் ஒரு பத்து நாளைக்கு முன்பு ட்ரைலரும் வெளியிடப்படுகிறது. அதன் பின்பு படம் வெளியாகி சில நாட்கள் கழித்து படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சிகள் என்ற சில ப்ரோமோ காட்சிகளும் பாடலின் முழு HD வீடியோக்களும் வெளியிடப்படுவதை தற்போது தமிழ் திரையுலகம் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வரும் திரைப்படமான வாரிசு படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே.! வாரிசு படத்தில் இருந்து செம்ம மாஸாக வெளியானது "தீ தளபதி" HD சாங் .! 1
ஏற்கனவே ஜிமிக்கி பொண்ணு என்கிற பாடலும், சோல் ஆஃப் வாரிசு என்கிற பாடலும் வெளியான நிலையில், தற்போது “தீ தளபதி” என்கிற பாடலும் வெளியாகி இருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே இது பல லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. தற்போது தளபதி வாரிசு படத்தை முடித்த கையோடு, தனது அடுத்த படமான தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு “லியோ” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த ப்ரோமோ வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகியிருந்தது. சாக்லேட் ஃபேக்டரியில் வைத்து கத்தி தயாரிப்பது போல ப்ரோமோ வெளியாகியிருந்தது இதனால் மீண்டும் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியின் ஒரு அதிரடி ஆக்சன் கலந்த படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரசு படமே இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது தளபதி அடுத்த அதிரடிக்கு தயாராகி இருக்கிறார். இந்த நிலையில் வாரிசு படத்தில் இருந்து hd குவாலிட்டி தரத்தில் ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டு வருகிறது.


அந்த வரிசையில் தற்போது தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களால் அதிகம் விரும்பி கேட்கப்பட்டும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யப்படும் வந்த “ரஞ்சிதமே” பாடல் இன்னும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் விரைவில் அந்த பாடலை வெளியிடுமாறு ரசிகர்கள் படக் குழுவினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் தீ தளபதி பாடலைக் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: T-Series Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்