பிக்பாஸ் பிரபலம் சாக்ஷியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

பிக்பாஸ் நடிகை ஒருவரிடம் எல்லை மீறிய கூல் சுரேஷின் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வெந்து தணிந்தது காடு என்கிற வசனத்தின் மூலமாக பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் எந்த படம் வெளியானாலும் அந்த படத்தில் நடித்தவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ இவர் முதல் ஆளாக சென்று படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்து அந்த படம் பற்றி ரிவ்யூ கூறுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பொதுவாக நெகட்டிவ் விமர்சனங்களை தவிர்த்து விட்டு படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டுமே இவர் கூறி வருவதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் மிக அதிகமாக இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பின்னர் பதாகைகளை நீட்டி “வெந்து தணிந்தது காடு அந்த படத்திற்கு வணக்கத்தை போடு” என்று இவர் செய்யும் லூட்டிகளுக்காகவே இவருக்கு பின்னால் இளைஞர் பட்டாளம் ஈ போல மொய்த்துக் கொண்டிருக்கும் .ஆனால் சில சமயங்களில் இவர் செய்யும் சில நிகழ்வுகள் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.! 1
சமீபத்தில் வெளியான விருமன் படத்தின் போது அந்த படத்தில் நடிகையாக நடித்திருந்த அதிதி சங்கரை தான் விரும்புவதாகவும், இயக்குனர் சங்கர் தான் தன்னுடைய மாமனார் என்றும் அதிதியை தனக்கு திருமணம் செய்து வைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்றும் பேசி சர்ச்சையில் சிக்கினார் கூல் சுரேஷ். பின்னர் இவரின் இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில் தான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும், அதிதி தனக்கு தங்கை போன்றவர் எனவும் பல்டி அடித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். பின்னர் சர்ச்சைகள் அனைத்தும் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் மாட்டி இருக்கிறார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் ஆரம்பத்தில் டி ராஜேந்தர் அவர்களின் பேட்டிகளில் தான் தோன்றினார். அவரின் பேட்டிகளுக்கு நடுவே வந்து திடீரென்று “சிம்பு வாழ்க” என்று போடும் கோஷத்தின் மூலமாக மிக பிரபலமானார். பின்னர் அனைத்து படத்திற்கும் சென்று ரிவ்யூ சொல்லிக் கொண்டிருக்கும் இவர், வழக்கம் போல சமீபத்தில் வெளியான “நான் கடவுள் இல்லை” என்கிற படத்திற்கு சென்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  "நீண்ட இடைவேளைக்கு பிறகு சினிமாவிற்கு வரும் செந்தில்"!! கூடவே மகனையும் படத்தில் களமிறங்குகிறார்"!!அறிவிப்பை வெளியிட்டு கொண்டாடி வரும் பிரபல நடிகர்!!

பிக்பாஸ் பிரபலம் சாக்ஷியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.! 3
வழக்கம்போல இந்த படம் குறித்து பாசிட்டிவாக பேசிக் கொண்டிருந்தார் கூல் சுரேஷ் அப்போது இந்த படத்தில் நடித்திருந்த பிக்பாஸ் சீசன் 3 புகழ் சாக்‌ஷி அகர்வாலும் அருகில் நின்று கொண்டிருந்தார். வழக்கம் போல படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை கூறிக் கொண்டிருந்த அவர், திடீரென சாக்க்ஷி மேல் தோள் மீது கை போட்டு பேசிக்கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராத விதமாக சாட்சிக்கு முத்தம் கொடுத்தார் கூல் சுரேஷ். இதை பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க வழக்கம் போல சுரேஷ் ஏதேதோ சொல்லி பேசி சமாளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே அதிதியை தன்னுடைய காதலி என்றும், வருங்கால மனைவி என்றும் பேசி சர்ச்சையை கிளப்பிய அவர், நடிகை யாஷிகாவிடமும் இதுபோல சிலுமிஷங்களில் ஈடுபட்டார். தற்போது பேட்டியின் போது சாக்‌ஷிக்கு முத்தம் கொடுத்ததால் கூல் சுரேஷை நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.இங்கிதம் தெரியாத மனிதரிடம் பேட்டி எடுக்க வேண்டாம் என்றும் அவர்கள் சாடி வருகின்றனர்.! அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

தொடர்புடையவை  ஒரு Scene மட்டும் வேண்டாம் என்ற தளபதி! அந்த கதையை மற்றொரு நடிகரை வைத்து எடுத்து மொக்கை வாங்கிய Sundar C !

YouTube Video Embed Code Credits: News Tamil 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment