என்ன திருத்துன அந்த தெய்வம் நல்லா இருக்கனும்.! சுடருக்காக கோவிலில் நேர்த்திக்கடன் செய்யும் வெற்றி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் பாப்பா உடல் நலம் பெற வேண்டி தற்போது வெற்றி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துகிறார். மேலும் சுடர் தன்னுடைய குழந்தை இல்லை என்றாலும் கூட என்னை திருத்திய அந்த தெய்வம் விரைந்து குணமட வேண்டும் என்று அவர் மனம் உருகி கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் கதாநாயகன் வெற்றி முன்பு ஒரு காலத்தில் மிகப்பெரிய ரடியாக இருக்கிறார்..அவர் கோவிலில் வைத்து பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார், அப்போது அந்த தப்பை தட்டிக் கேட்க வரும் அபி கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் வெற்றி. இங்கிருந்து இந்த கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளாத வெற்றியின் குடும்பத்தினர் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அபியை புரிந்து கொண்டு அவரை ஏற்றுக் கொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என்ன திருத்துன அந்த தெய்வம் நல்லா இருக்கனும்.! சுடருக்காக கோவிலில் நேர்த்திக்கடன் செய்யும் வெற்றி.! 1

இந்த கதை முடியும் தருவாயில் இருந்த நிலையில், தற்போது கதையில் திடீர் திருப்பமாக அபி கலெக்டர் ஆனது போலவும் வெற்றி மிகப்பெரிய ரவுடி ஆனது போடவும் காட்டப்பட்டது் மேலும் வெற்றிக்கும் அபிக்கும் பிறந்த குழந்தையாக சுடர் என்கிற புது கதாபாத்திரம் உள்ளே புகுத்தப்பட்டது. தற்போது கதைப்படி ஒரு விபத்தில் வெற்றியும் சுடரும் சந்தித்துக் கொள்கின்றனர். சுடருக்கும் வெற்றி தன் அப்பா என்பது தெரியாது, வெற்றிக்கும் சுடர் தான் தன் மகள் என்பது தெரியாது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். இந்த நிலையில் சுடருக்கு ஒரு கார் விபத்து ஏற்பட்டு அவர் ஐசுயூவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் மருத்துவமனைக்கு வரும் வெற்றிக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைக்கிறது. சுடர் அபியின் குழந்தை தான், ஆனால் வெற்றிக்கு பிறந்ததில்லை அபிக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது என்று யாரோ வதந்தியை கிளப்பி இருக்கின்றனர்.

ஆனால் அது உண்மை இல்லை, சுடர் வெற்றிக்கு பிறந்த குழந்தைதான். இருந்தபோதிலும் இந்த பொய்யை நம்பி வெற்றியும் சுடர் தனக்கு பிறந்த குழந்தை இல்லை என்றாலும் தன்னை மாற்றிய அந்த தெய்வம் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று சொல்லி சுடருக்காக கோவிலில் நேர்த்திக்கடனும் பிரார்த்தனைகளும் செலுத்துகிறார் அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்