சுடருக்கு மீண்டும் வந்த ஆபத்து.! உயிரை குடுத்து காப்பாற்றிய வெற்றி.! வெற்றியை புரிந்து கொள்ளும் அபி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடரிடம் பாசத்துடன் இருக்கும் வெற்றியைப் பார்த்து அபிக்கு அவர் மீது காதல் வருகிறது. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. இந்த நடகத்தின் கதை குறித்து பார்த்தோமானால், பிரபல ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கும் வெற்றி ஒருமுறை கோவிலில் ரவுடிசம் செய்து கொண்டிருக்கிறார். அதை வக்கீலின் மகளாக இருக்கும் அபி தட்டிக் கேட்க செல்கிறார் அப்போது அபியின் கழுத்தில் எதிர்பாராத விதமாக தாலி கட்டி விடுகிறார் வெற்றி. விளையாட்டாக செய்த இந்த காரியம் வினையாக முடிந்தது. அபி வெற்றி தான் என்னுடைய கணவர், அவருடன் தான் வசிப்பேன் என்று சொல்லி வெற்றியின் வீட்டிற்கு வருகிறார். வெற்றியை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளும் அபி, அவருடன் நெருங்கி பழகுகிறார். இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த தொடர் முடியும் தருவாயில் இருந்தது. தற்போது இந்த கதையை வேறு களத்திற்கு மாற்றி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுடருக்கு மீண்டும் வந்த ஆபத்து.! உயிரை குடுத்து காப்பாற்றிய வெற்றி.! வெற்றியை புரிந்து கொள்ளும் அபி.! 1
தற்போது கதைப்படி அபி படித்து கலெக்டராக மாறியிருக்கிறார். வெற்றி அபியிடமிருந்து விலகி பெரிய ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் சுடர் என்கிற ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது சுடர் அபியிடம் வளர்ந்து வருகிறது. ஒரு நாள் ரோட்டில் வெற்றியை ரவுடி ஒருவர் கொல்ல வரும்போது சுடர் வெற்றியை காப்பாற்றுகிறார். அன்று தொடங்கி வெற்றியும் சுடரும் நல்ல நண்பர்களாக மாறிப் போகின்றனர். ஒரு கட்டத்தில் சுடர் அபிக்கு பிறந்த குழந்தை என்றும், தன்மகள் என்றும் வெற்றிக்கு தெரிய வருகிறது. ஆனால் சிலர் அது உனக்கு பிறந்த குழந்தை இல்லை வேறு ஒருவனுக்கு பிறந்தது என்று வெற்றியை மனம் மாற்றி இருக்கின்றர். இதையெல்லாம் நம்பாத வெற்றி சுடருக்காக ஏங்கி தவிக்கிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அபியின் பகையாளிகள் அபயின் கார் மீது லாரியை ஏற்றி விபத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் சுடரும் கடுமையான விபத்திற்கு உள்ளாகிறார். எனவே சுடருக்கு பார்டிகார்டாக வெற்றியை போலீஸ் அதிகாரிகள் நியமிக்கின்றனர்.

சுடருக்கு பார்டிகார்டாக வரும் வெற்றி தற்போது அவருடன் இன்னும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார். இந்த நிலையில் தற்போது ரவுடிகள் அபியின் வீட்டை முற்றுகை இடுகின்றனர். கற்களை வீசி அபியை துரத்துகின்றனர். இதனால் அபியும் சுடரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அவர்களிடமிருந்து வெற்றி இருவரையும் மீட்டு பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது வெற்றி சுடரிடம் காட்டும் அன்பை பார்த்த அபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறுகிறது. விரைவில் வெற்றியை அபி புரிந்து கொண்டு இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்