பெண்களை கடத்துபவர்கள் பற்றி உண்மையை உடைத்த வெற்றி.! பயத்தில் கண்மணி.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடு சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் தென்றல் வந்து என்னை தொடும். தற்போது இந்த சீரியலின் கதைப்படி மாவட்டத்தில் இருக்கும் இளம் பெண்களை யாரோ கடத்திக் கொண்டு போகின்றனர். இதனால் கலெக்டராக இருக்கும் அபிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்படுகிறது. மக்கள் கலெக்டர் அலுவலகத்தை சூழ்ந்து கொண்டு அபி மீதும் அலுவலகம் மீதும் கற்களை வீசி தாக்குதல்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் அபி என்ன செய்வது என்று தெரியாமல் திருத்திருவன முழித்துக் கொண்டிருக்கிறார். வெற்றியும் ஒரு புறம் அபிக்காக விசாரணையில் இறங்குகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை கடத்துபவர்கள் பற்றி உண்மையை உடைத்த வெற்றி.! பயத்தில் கண்மணி.! 1

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போலீசார் பரமுவைத் தேடி அவரது வீட்டிற்கு செல்கின்றனர். பெண்களை கடத்துகிறது இவர்கள்தான் என்று சொல்லி பரமுவை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இது அமைச்சர் வரைக்கும் செல்கிறது. அமைச்சர் அபிக்கு போன் செய்து காஞ்சிபுரத்தை உலுக்கிய ஒரு கேசையை முடித்து வைத்திருக்கிறீர்கள். உங்களையே காஞ்சிபுரத்திற்கு நிரந்தரமாக கலெக்டராக நியமிக்கலாம் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் வெற்றி கபிலன் சாரை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் இறுதியில் பரமுவைப் போய் கைது பண்ணி இருக்கிறார். ஆனால் பரமு இதை செய்யவே இல்லை பெண்களை கடத்துகிறது ஒரு பெண்தான் என்று கூறுகிறார்.

வெற்றி இப்படி கூறியதை கேட்டதும் கண்மணி பயத்தில் முழிக்கிறார். வெற்றிக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்றும் விரைவில் தான் சிக்கப் போவது உறுதி என்றும் பயத்தில் கண்மணி உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்