விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தனது மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கும் வெற்றி மற்றும் அபி இருவரும் அருகருகில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது வெற்றிக்கு இருமல் வரவே அவர் தலையில் ஓங்கி அடிக்கிறார் அபி. இதனால் வெற்றிக்கு சிரிப்பு வந்து விடுகிறது. அந்த க்யூட்டான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டது. கலெக்டராக இருக்கும் அபியும் ரவுடியாக இருக்கும் வெற்றியும் திருமணம் செய்து கொண்டனர். வெற்றி ரவுடி என்பது தெரிந்தே அபி அவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் பிரிந்த நிலையில் அபி படித்து முன்னேறி கலெக்டராக மாறி இருக்கிறார் அதே சமயம் வெற்றி இன்னும் அப்படியே ரவுடியாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். வெற்றிக்கும் அபிக்கும் சுடர் என்கிற குழந்தை பிறந்திருக்கிறது. இந்த விஷயத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி தெரிந்து கொண்டார். சுடர் தன் மகள் என்பதை தெரிந்து கொள்ளும் வெற்றி மீண்டும் அபியுடன் இணைந்து வாழ ஆசைப்படுகிறார். இதற்காக அவர் பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக தற்போது தனது மனைவி அபியை தனது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார். தனது தந்தையின் ஆசைப்படி ஊர் திருவிழாவில் அபிக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்று அபியை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் வெற்றி. அங்கு அபிக்கு சில பிரச்சினைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க தற்போது அபியும் வெற்றியும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது அபிக்கு வெற்றி உணவு ஒட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் வெற்றிக்கு சாப்பாடு புரை ஏறுகிறது. அப்போது அபி அவரது தலையில் தட்டிக் கொடுக்கிறார். இப்படியாக இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விரைவில் இவர்கள் இருவரையும் சேர்த்து விடுங்கள் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television