வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் முடிந்ததா? இணையத்தில் கசிந்த வீடியோ.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் முடிந்து வரவேற்பு நடப்பது போன்ற வீடியோவை தற்போது வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா, ஆரம்பத்தில் இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வந்தனர். கருப்பாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நிறப் பிரச்சினையால் அவரது மாமியார் வீட்டில் நடக்கும் கொடுமைகள் என்று இந்த கதை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இது பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடித்த ரோஷினியிடம் நிறம் குறைவாக பல பெண்கள் சென்று, நீங்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் என்று கூட கூறியிருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் முடிந்ததா? இணையத்தில் கசிந்த வீடியோ.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! 1

விளம்பரம்

பின்னர் இந்த சீரியலில் இருந்து ரோஷினி விலகிவிட கண்ணம்மா ரோலில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலை ரசிகர்கள் எந்த அளவிற்கு விரும்பி பார்க்கத் தொடங்கினார்களோ? அந்த அளவிற்கு ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு தற்போது கதை நகர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கண்ணம்மாவிற்கு பிறந்த குழந்தைகள் தன் குழந்தைகளே அல்ல என்று பாரதி மல்லுக்கட்டி வருகிறார். அதேசமயம் வில்லி வெண்பாவோ பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால் ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மட்டும் போதும் இந்த கதை முடிந்து விடும். ஆனால் அதை செய்யாமல் பாரதி என்னென்னமோ செய்து வருகிறார். இயக்குனரும் கதையை முடிக்க முடியாமல் இழுத்தடித்து வருகிறார்.

தொடர்புடையவை  "மாட்டிக்கினாரு ஒருத்தரு" முத்துவிடம் கையும் களவுமாக சிக்கிய மனோஜ்.! தரமான ப்ரோமோ இதோ.!

வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் முடிந்ததா? இணையத்தில் கசிந்த வீடியோ.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.! 3

விளம்பரம்

இந்த கதையை முடித்து விடுங்கள் என்று ரசிகர்களே இயக்குனருக்கு கோரிக்கை வைக்கும் அளவிற்கு கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோடில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் பாரதியை கண்ணம்மா தடுத்து நிறுத்தி கேள்விகளால் திட்டி தீர்த்து விடுகிறார். மேலும் வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரோகித் தான் அப்பா என்ற உண்மையும் பாரதிக்கு தெரிய வருகிறது. ஆனால் வில்லி வெண்பா தனது instagram பக்கத்தில் பாரதிக்கும் அவருக்கும் திருமண வரவேற்பு நடப்பது போன்ற வீடியோவை பகிர்ந்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த கதை இப்பொழுது முடியாது என்ற ஒரு முடிவுக்கும் அவர்கள் வந்து விட்டனர். Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment