கலெக்டர் ஆக மாறிய அபி.! புது கதைக்களத்துடன் தென்றல் வந்து என்னை தொடும் ப்ரோமோ.! கலாய்க்கும் ரசிகர்கள்.!

வெளியிட்டது

விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த போதும் தற்போது டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வினோத் பாபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக பவி நடித்துக் கொண்டிருக்கிறார். வினோத் பாபு வெற்றியாகவும், பவித்ரா அபியாகவும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். வினோத் பாபு முதலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில்தான் அறிமுகமானார். அந்த சீரியலில் தேஜஸ்வியினுடன் இவர் நடிப்பு அருமையாக இருந்தது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலிலும் அசத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கலெக்டர் ஆக மாறிய அபி.! புது கதைக்களத்துடன் தென்றல் வந்து என்னை தொடும் ப்ரோமோ.! கலாய்க்கும் ரசிகர்கள்.! 1

ரவுடியாக வரும் வெற்றி சூழ்நிலை காரணமாக பெரிய வக்கீலின் மகள் அபியின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். பின்னர் வெற்றிதான் தன் கணவர் என்று அவர் குடும்பத்தில் சென்று வாழ ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் அபியை ஏற்றுக் கொள்ளாத வெற்றி பின்னர் அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் அபிக்கு இன்னொரு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அதில் போராடி அபியை தன்னுடன் வாழ அழைத்து வந்துள்ளார் வெற்றி. இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். ப்ரோமோ வெளியான சில மணித்துளிகளில் பல லட்சம் பார்வையாளர்களை அள்ளுவது வழக்கம். தற்போது சீரியலில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது.

இந்த சீரியல் முடிவுக்கு வருவது போல வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதையை காண்பித்து கதை தொடர்கிறது. அதில் ஆறு ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த வெற்றி தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த ஆறு வருடத்திற்குள் அபி கலெக்டராக மாறி இருக்கிறார். இதற்கு பின்னர் என்ன நடக்கிறது என்பது குறித்து இனி கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்த போதும் பலரும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தை காப்பியடித்து எடுத்து விட்டீர்களா? என்று கலாய்த்து வருகின்றனர். சமீப காலமாகவே சின்னத்திரை தொலைக்காட்சிகள் வெள்ளித்திரையை காப்பி அடித்து சில காட்சிகளை எடுப்பது வழக்கமாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த தொடரும் அதுபோல ஒரு கேளிக்கு உள்ளாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்