கயல் கதையை முடிச்சிடு.! கயலை கொல்ல கௌதமை ஏவி விட்ட சிவசங்கரி.! அடுத்த பரபரப்பு.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் பல விறுவிறுப்பான கட்டங்கள் தற்போது நடந்து வரும் நிலையில், தற்போது கயலை கடத்த சிவசங்கரி திட்டமிடுகிறார். இதனால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளும் கயலை கடத்திக் கொண்டு செல்வதற்காக தற்போது திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தற்போது அடுத்த பரபரப்பு எழுந்திருக்கிறது. இருந்தபோதிலும் இந்த சீரியலின் ரசிகர்கள் தற்போது இந்த கதையை நினைத்து வெறுப்பு கொண்டிருக்கின்றனர். பலருக்கும் சீரியல் போகும் போக்கு பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கயல் கதையை முடிச்சிடு.! கயலை கொல்ல கௌதமை ஏவி விட்ட சிவசங்கரி.! அடுத்த பரபரப்பு.! 1

விளம்பரம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டில் முதன்மையிடம் வகித்து வரும் தொடர்தான் கயல் சீரியல். இந்த சீரியலில் தற்போது கயலுக்கும் எழிலுக்கும் திருமண நடைபெறுமா.? என்கிற பரபரப்புடன் நாளுக்கு நாள் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக எழிலின் வரவேற்பு என்று சொல்லி கதை நகராமல் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. இது பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்திவிட்டதாக தற்போது கமெண்ட்டுகளில் கருத்துக்களை கூறி வருகின்றனர். எழிலுக்கும் கயலுக்கும் தான் திருமணம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது ஆர்த்திக்கும் எழிலுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தொடர்புடையவை  நீ யாருடா என்ன பத்தி பேச.! மீண்டும் விக்ரமனை ஒருமையில் மிக அசிங்கமாக பேசிய அசீம்.!

திருமண மண்டபத்திற்கு கயலின் குடும்பம் வருகை தருகிறது. ஆனால் இதை ஆர்த்தியின் தயாரான வடிவு கடுமையாக எதிர்க்கிறார். அவர்களை வெளியே போக சொல்லுகிறார். ஆனால் எழிலோ அவர்கள் வெளியே சென்றால் நானும் வெளியே சென்று விடுவேன் என்று வடிவை மிரட்டுகிறார். இதனால் வடிவு ஒரு பக்கம் ஷாக்கிங்கில் இருக்கிறார். நிலைமை இப்படி ஒரு பக்கம் இருக்க சிவசங்கரி சூர்யாவை அனுப்பி கயலின் வாழ்க்கையை கெடுக்க சதி திட்டம் தீட்டிய விஷயம் கயலுக்கு தெரிய வருகிறது. இதனால் கயல் சிவசங்கரியின் கன்னத்தில் அறைந்து விட்டு செல்கிறார். இதனால் கடுப்பாகும் சிவசங்கரி கயலை கடத்தி விட கௌதம் மற்றும் அடியாட்களை அனுப்புகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

விளம்பரம்

கயல் கதையை முடிச்சிடு.! கயலை கொல்ல கௌதமை ஏவி விட்ட சிவசங்கரி.! அடுத்த பரபரப்பு.! 3
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது ரசிகர்கள் கமெண்ட்களில் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள், ஒரு வாரமாக எழிலின் வரவேற்புக் காட்சிகள் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கதையை நகர்த்த முடியவில்லை என்றால் முடித்து விடுங்கள் என்று கோபப்பட்டு கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ ஆரம்பத்தில் விரும்பிப் பார்த்த இந்த சீரியல் தற்போது சுத்தமாக பார்க்க பிடிக்கவில்லை, எழில் திருமண காட்சிகள் மிகவும் போர் அடிப்பதாக கமெண்ட்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  யோவ் எங்கயா இருக்க? இன்னும் வீட்டிற்கு வந்து சேராத பிரவுன் மணி.! செம்ம கடுப்பில் முத்து.! ப்ரோமோ இதோ

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment