சுடர் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளப்போகும் வெற்றி.! தாறுமாறான ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் தன்னுடைய மகள்தான் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கும் வெற்றி தற்போது ராஜஸ்தானில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று அவரிடம் கேட்டு தற்போது சுடர் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறார். ஒருபுறம் அபி, வெற்றி சுடர் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளக் கூடாது என்று அவரை தடுக்க சென்று கொண்டிருக்கும் நிலையில் வெற்றி தற்போது அவருடைய திட்டத்தில் பாதி முன்னேறி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் தற்போது அடுத்த பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. உணர்வுபூர்வமாகவும் அதே சமயம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமலும் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் கதை குறித்து பார்த்தோம் என்றால் மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுடர் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளப்போகும் வெற்றி.! தாறுமாறான ப்ரோமோ இதோ.! 1

பின்னர் வெற்றியை விட்டு பிரியும் அபி ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்று அங்கு தங்கி இருந்து கலெக்டராக மீண்டும் திரும்பி சென்னைக்கு வருகிறார். அவருக்கு சுடர் என்கிற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் சுடரும் வெற்றியும் எதார்த்தமாக சந்தித்துக் கொள்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில் சுடர் அபியின் குழந்தை தான் என்று வெற்றிக்கு தெரிய வருகிறது. ஆனால் இதை நேரடியாக வெற்றியிடம் யாருமே கூறவில்லை. இதனால் சந்தேகம் கொள்ளும் வெற்றி சுடர் தன்னுடைய மகள்தான் என்பதை நிரூபிப்பதற்காக அபி ராஜஸ்தானில் படித்துக் கொண்டிருந்தபோது வசித்த மாவட்டத்திற்கு செல்கிறார். அந்த கிராம நிர்வாக அலுவலரை தற்போது அணுகியிருக்கிறார் வெற்றி. எப்படியாவது சுடர் தனது மகள் தான் என்று வெற்றி ஒருபுறம் பாச போராட்டம் நடத்திக் கொண்டிருக்க வெற்றியின் தோழியாக இருக்கும் கண்மணி வெற்றி பற்றிய தகவல்களை அவ்வப்போது அபிக்கு தெரியப்படுத்துகிறார்.

இதனால் வெற்றி சுடர் குறித்த உண்மைகளை தெரிந்து கொள்ளக் கூடாது என்று சொல்லி அபி தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அபியும் ராஜஸ்தானுக்கு வந்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெற்றி ராஜஸ்தானில் அபி தங்கியிருந்த கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து அவரிடம் பேசுகிறார். மேலும் அவருக்கு லஞ்சம் கொடுப்பது போல் பணத்தை கொடுக்கிறார். அப்போது என்னை பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர் என்று நீ நினைக்கிறாயா என்று விஏஓ திட்ட, தனது மகளைத் தேடி அலையும் தந்தையின் பாச போராட்டத்திற்கு கொடுக்கப்படும் காணிக்கையாக நினைத்து தனக்கு உண்மைகளை கூறுமாறு கேட்கிறார். உடனே விஏஓவும் அவருக்கு சில ரெஜிஸ்டர்களை எடுத்து வந்து காட்டுகிறார். இதனால் வெற்றிக்கு சுடர் குறித்த உண்மை தெரிய வருமா? வெற்றியின் பாசப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்