அபிக்காக களத்தில் குதித்த வெற்றி.! வெற்றிக்கு கிடைத்த முதல் துப்பு.! வெற்றி ஆட்டம் ஆரம்பம்.!

வெளியிட்டது

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது அபியின் பெயரை காப்பாற்றுவதற்காக விசாரணையில் வெற்றியே குதித்து இருப்பது போன்ற ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். ரவுடியாக இருக்கும் வெற்றி அபியின் கழுத்தில் தாலி கட்டி தனது மனைவி ஆக்கிக் கொள்கிறார். ஆரம்பத்தில் பிடிக்காமல் வாழ்ந்து வரும் இவர்கள் ஒரு கட்டத்தில் சேர்ந்து வாழத் தொடங்குகின்றனர். ஆனால் வெற்றியும் அபியும் கட்டாயத்தால் பிரிந்து விடுகின்றனர். வெற்றி வழக்கம் போல மிகப் பெரிய ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்க அபியோ படித்து மாவட்டத்தின் கலெக்டர் ஆக மாறி இருக்கிறார். அபிக்கும் வெற்றிக்கும் சுடர் என்கிற குழந்தையும் பிறந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபிக்காக களத்தில் குதித்த வெற்றி.! வெற்றிக்கு கிடைத்த முதல் துப்பு.! வெற்றி ஆட்டம் ஆரம்பம்.! 1
சுடர் தன்னுடைய மகள் என்று தெரியாமலேயே இத்தனை காலமாக வெற்றி அவருடன் பழகி வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் சுடர் தனக்கு பிறந்த மகள் என்பதை வெற்றி தெரிந்து கொண்டு அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். ஆனால் அபியோ சுடருக்கு வெற்றி தான் அவளுடைய தந்தை என்று தெரியக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க தற்போது அபிக்கு புதிய பிரச்சனை ஒன்று எழுகிறது. அதில் மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள் கடத்தப்படுகின்றனர். இது அபிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் பெண்கள் அனைவரும் அபியை தாக்க தொடங்குகின்றனர். கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கற்களால் தாக்கத் தொடங்குகின்றனர். இதனால் அபிக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது. அதற்காக வெற்றி தற்போது தானே விசாரணையில் இறங்குகிறார்.


அதில் பெண் ஒருவர்தான் அனைத்து பெண்களையும் கடத்திக் கொண்டிருப்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தும் பொழுது அந்தப் பெண் தன்னை ஒரு பெண் தான் கடத்த முற்பட்டதாக கூறுகிறார். இதனால் அந்த பெண் யார் எதற்காக இவர்களை கடத்துகிறார்கள் என்று வெற்றி குழம்பி போய் நிற்கிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்