தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் வெற்றி தான் அபியின் புருஷன் என்பதையும், சுடர் வெற்றி பெற்ற மகள் என்பதையும் அபியின் அப்பா தற்போது கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், நடிகை பவித்ரா அபி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் பிரபல வக்கீலாக இருப்பவரின் மகள்தான் அபி. இவர் ஒரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு ரவுடியாக இருக்கும் வெற்றி தகராறு செய்து கொண்டிருப்பார். அதை தட்டிக் கேட்க சென்ற அபியின் கழுத்தில் வெற்றி தாலி கட்டி விடுவார். இங்கிருந்து இந்த கதை தொடங்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலி கட்டி விட்டதால் வெற்றியுடன் தான் வாழ்வேன் என்று சொல்லி அபி வெற்றியின் வீட்டிற்கு செல்கிறார். ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அபியை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த நாடகம் முடியும் தருவாயில் இருந்த நிலையில் திடீரென் யூடர்ன் போட்டு தற்போது கதை தொடர்ந்து வருகிறது. அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தையாக சுடர் என்கிற பாப்பாவை கதையில் புதிதாக இறக்கி இருக்கின்றனர். தற்போது கதைப் படி தனது அப்பா தான் வெற்றி என்று தெரியாமலேயே சுடர் பாப்பா வெற்றியுடன் பழகிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை வெற்றி நடுரோட்டில் வாகனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது வில்லன் ஒருவன் வெற்றியை வெட்ட வருவார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த சுடர் பாப்பா வெற்றியை அலர்ட் செய்து காப்பாற்றி விடுவார். பின்னர் மயக்கம் அடைந்த சுடரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் அவர் சுடருடன் நெருக்கம் ஆகிவிடுகிறார்.
ஆனால் சுடர் தனக்கும் அபிக்கும் பிறந்த மகள் என்பது தெரியாமலேயே வெற்றி அந்த குழந்தையுடன் பழகி வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடருடன் வெற்றி கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அபியின் தந்தை அந்த கோவிலுக்கு வருகிறார். அவரைப் பார்த்த அந்த குழந்தை தாத்தா என்று கூப்பிடுகிறது. ஆனால் அவர்களிடமிருந்து மறைந்து செல்லும் தாத்தா பின்னர் அவர்களைப் பார்த்துவிட்டு வெற்றிக்குப் பிறந்த குழந்தைதான் சுடர் என்கிற உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். அந்த ப.ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television