இனிமே குடிக்க மாட்டேன் டா தங்கம்.! அப்பாகிட்ட பேசாம மட்டும் இருக்காத டா.! கதறி அழும் வெற்றி..!

வெளியிட்டது

வீட்டில் வைத்திருந்த மதுபான பாட்டில்களை எல்லாம் உடைத்து விட்டு வெற்றி தனது மகள் சுடரை பார்பதற்க்காக கிளம்பி போயிருக்கிறார். பள்ளிக்கு வெளியில் நிற்கும் அவர் ஜன்னல் வழியாக தனது மகளை பார்த்து, இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சொல்லி தரையில் விழுந்து கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருகிறது. இந்தத் தொடரில் நடிகர் வினோத் பாபு வெற்றி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், நடிகை பவித்ரா அபி என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் பிரபல வக்கீலாக இருப்பவரின் மகள்தான் அபி. இவர் ஒரு முறை கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு ரவுடியாக இருக்கும் வெற்றி தகராறு செய்து கொண்டிருப்பார். அதை தட்டிக் கேட்க சென்ற அபியின் கழுத்தில் வெற்றி தாலி கட்டி விடுவார். இங்கிருந்து இந்த கதை தொடங்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமே குடிக்க மாட்டேன் டா தங்கம்.! அப்பாகிட்ட பேசாம மட்டும் இருக்காத டா.! கதறி அழும் வெற்றி..! 1

தாலி கட்டி விட்டதால் வெற்றியுடன் தான் வாழ்வேன் என்று சொல்லி அபி வெற்றியின் வீட்டிற்கு செல்கிறார். ஆரம்பத்தில் அபியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அபியை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்த நாடகம் முடியும் தருவாயில் இருந்த நிலையில் திடீரென் யூடர்ன் போட்டு தற்போது கதை தொடர்ந்து வருகிறது. அபிக்கும் வெற்றிக்கும் பிறந்த குழந்தையாக சுடர் என்கிற பாப்பாவை கதையில் புதிதாக இறக்கி இருக்கின்றனர். தற்போது கதைப் படி தனது அப்பா தான் வெற்றி என்று தெரியாமலேயே சுடர் பாப்பா வெற்றியுடன் பழகிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை வெற்றி நடுரோட்டில் வாகனத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது வில்லன் ஒருவன் வெற்றியை வெட்ட வருவார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த சுடர் பாப்பா வெற்றியை அலர்ட் செய்து காப்பாற்றி விடுவார். பின்னர் மயக்கம் அடைந்த சுடரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் அவர் சுடருடன் நெருக்கம் ஆகிவிடுகிறார்.

தொடர்ந்து வெற்றியுடன் பழகி கொண்டிருக்கும் சுடர் ஒரு முறை வெற்றியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வருகிறார். அப்போது குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கும் வெற்றியை பார்த்து இனிமேல் உன் முகத்தில் கூட முழிக்க மாட்டேன் என்று சொல்லி கோபத்துடன் வெளியேறுகிறார். இதனால் மனம் உடைந்து போன வெற்றி தற்போது வீட்டில் வைத்து இருந்த சாராய பாட்டில்கள் எல்லாவற்றையும் உடைத்து விட்டு சுடரை தேடி அவரது பள்ளிக்கே போகிறார். அங்கு ஜன்னல் வழியாக மகளை பார்க்கும் அவர் இனிமே குடிக்க மாட்டேன் என்று சைகையில் சொல்லி கதறி அழுகிறார். சில நிமிடங்களில் சுடர் ஜன்னல் அருகில் இல்லாமல் போகிறார். எனவே அவர் மீண்டும் வெற்றியை தேடி வருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்