அஜித்துக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டின் முன்பு வெகு நேரமாக காத்திருந்த தளபதி விஜய்.! வைரல் Video.!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் காலமான நிலையில் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இன்று காலை நான்கு முப்பது மணி அளவில் நடிகர் அஜித்தின் தந்தை மறைந்து விட்டார் அவரது இறுதிச் சடங்குகள் 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் சில மணி நேரத்திற்கு முன்பு நடந்து முடிந்த்து. இந்த நிலையில் லியோ பட ஷூட்டிங்கில் காஷ்மீர் இருந்த விஜய் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் சென்னை திரும்பி இருந்தார். அவர் அஜீத்தின் தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னணி நிர்வாகிகள் கூறிய போது, நேற்று இரவு எட்டு முப்பதுக்கே நடிகர் விஜய் வந்து சென்னை வந்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் இன்று காலை நடிகர் அஜித்தின் தந்தை மறைவு செய்தி கேட்டு அவர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள திருவான்மியூர் வரை காரில் வந்து விட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அஜித்துக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டின் முன்பு வெகு நேரமாக காத்திருந்த தளபதி விஜய்.! வைரல் Video.! 1
ஆனால் பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு விஜய் புறப்பட்டு விட்டார் என்ற செய்தி கேட்டு மீண்டும் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் அஜித்தின் வீட்டிற்க்கே தனது காரை விடுமாறு விஜய் கூறியதாக கூறப்படுகிறது.மேலும் அஜீத் அந்த வீட்டிற்கு வரும் வரை நடு ரோட்டிலேயே காரில் வெளியிலேயே காத்திருந்த விஜய் அஜித் வந்த விஷயம் தெரிந்த பின்பு அவரது வீட்டிற்குள் சென்று இருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீட்டிற்கு உள்ளே சென்ற விஜய் அஜித்திடம் தந்தை இழப்பிற்கு இரங்கல்களையும்,அவருக்கு ஆறுதல்களையும் சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடு ரோட்டில் விஜயின் கார் நின்றிருந்த விஷயம் செய்தியாளர்களுக்கு பின்னர் தான் தெரிந்தது. ஏனென்றால் கார் முழுவதும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால், காரில் இருந்தவர்கள் யார் என்பது தெரியாமலேயே இருந்தது. பின்னர் கார் அஜித்தின் வீட்டை நோக்கி வந்த பொழுது காரின் கண்ணாடிகள் இறக்கப்பட்ட பின்பு தான் உள்ளே இருப்பது விஜய் என்று அனைவருக்கும் தெரியவந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  நான்கு நாட்களில் GOAT படத்தின் மொத்த வசூல்..! BoxOffice-ஐ உடைத்தெறிந்த Thalapathy..!

அஜித்துக்கு ஆறுதல் சொல்ல அவர் வீட்டின் முன்பு வெகு நேரமாக காத்திருந்த தளபதி விஜய்.! வைரல் Video.! 3

இன்று காலை அஜித்தின் தந்தை இறந்த செய்தி வெளியானது முதலே அஜித் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஒரு குடும்ப நிகழ்வாகவே பார்க்க வேண்டும். யாரும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்கிற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் காலை நான்கு முப்பது மணிக்கு இறந்தவருக்கு 11 மணிக்கு எல்லாம் அடக்கமும் செய்து விட்டதால் பிரபலங்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் நடிகர்கள் விஜய், உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment