தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுடர் பாப்பாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டால் வெற்றியை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி விடுவேன் என்று அபி கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட சுடர் தனக்கு வயிறு வலி வந்தது போல் டாக்டரிடம் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை கண்டுபிடித்த வெற்றி எதற்காக இப்படி பொய் சொன்னாய் என்று கேட்க? அபி உன்னை வீட்டில் இருந்து துரத்தி விடுவேன் என்று சொன்னதால் தான் வயிறு வலி வந்தது போல் நாடகமாடியதாக சுடர் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் வித்தியாசமான கதையம்சம் கொண்டது. வெற்றியும் அபியும் ஒரு காலத்தில் கணவன் மனைவியாக இருந்தனர். பின்னர் இருவரும்பிரிந்து சென்ற அபி கலெக்டராக இருக்கிறார். வெற்றி ரவுடியாக இருக்கிறார். இவர்களுக்கு சுடர் என்கிற குழந்தையும் இருக்கிறது. தற்போது கதைப்படி சுடர் வெற்றிக்கு பிறந்த குழந்தை என்பதை வெற்றி தெரிந்து கொள்கிறார். ஆனால் வெற்றிக்கு இந்த விஷயம் தெரியும் என்பது அபிக்கு இத்தனை நாள் தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் சுடருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவரைப் பார்த்துக் கொள்வதற்காக வெற்றி அபியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் அபி தனது அக்காவிடம் சுடர் மட்டும் நன்றாகிவிட்டால் இப்போதே வெற்றியை வீட்டிலிருந்து அனுப்பி விடுவேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுடர் தற்போது தனக்கு வயிறு வலி வந்தது போல மருத்துவரிடம் நாடகம் ஆடுகிறார். ஏன் பொய் சொன்னா என்று வெற்றி சுடரைப் பார்த்து கேட்க, எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டால் அபி உன்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று சொன்னார். அதனால் தான் நான் பொய் சொன்னேன் என்று சுடர் கூறுகிறார். இதனால் வெற்றி நெகிழ்ந்து போகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television