இயக்குனர் தருண் கோபி இயக்கத்தில் வெளியான ‘திமிரு’ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. விஷால் ரீமாசனுடன் வில்லியாக நடித்து தூள் கிளப்பியவர் “ஷ்ரியா ரெட்டி “. சாமூராய் படத்தில் தனது முதல் என்ட்ரியை தந்தாலும் திமிரு படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

அவர் தமிழில் நடித்த வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் என்ற படங்கள் பெரிதாக புகழ்பெறவில்லை. தோரணை, வெடி படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.விஷாலின் மூத்த சகோதரரும் தயாரிப்பாளருமான ‘விக்ரம் கிருஷ்ணாவை’ மணந்த பின்னர் சினி இன்டஸ்ட்ரீக்கு வரவில்லை.
ஆனால் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக ‘அண்டாவ காணோம்’ படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஓ.டி.டி ரிலீஸ்காக காத்திருக்கும் இப்படம் காமெடி படமாகும். இந்நிலையில் அவர் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. திமிரு படத்தில் எவ்வாறு இருந்தாரோ இன்றும் அதே போல் இளமையாக காட்சியளிக்கிறார்.