நடிகர் தனுஷ் இன்று இந்திய முழுவதும் அறியப்படும் நடிகராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் நேற்று ஹாலிவுட்டில் “தி கிரே மேன்” படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொது இவர் நடிப்பில் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் “திருச்சிற்றம்பலம்” செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்”, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூறி இயக்கத்தில் “வாத்தி” போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. பாடல் லிரிக் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற படமும் அறிவிவிக்கப்பட்டுள்ளது. படு பிஸியாக நடித்து வரும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் எழுதியும், சில பாடல்கள் பாடியும் வருகிறார். அந்த வகையில் இப்பொது நடிகர் தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ள “திருச்சிற்றம்பலம்” படம் வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் 5 வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளன. இருவருமே இசைத்துறையில் மிக பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளனர். இதனாலேயே இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் பாடல் “தாய் கிழவி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பொது மீண்டும் படத்தில் இருந்து 2வது சிங்கள் வெளியாகியுள்ளது. மேகம் கருக்காத என துவங்கும் இந்த பாடலை தனுஷ் எழுதி, அவரே பாடி உள்ளார். தாய் கிழவி பாடலையும் அவரே எழுதி , பாடி இருக்கிறார். இந்த பாடலில் பழக பழக பிடிக்குதே…பழைய ரணங்கள் மறக்குதே என தனுஷ் ஒரு வரி எழுதி உள்ளார். இதனை கேட்டுள்ள ரசிகர்கள் சிலர் ஒருவேளை தன்னுடைய திருமண முறிவை குறித்து மறைமுகமாக பேசியுள்ளாரோ என யோசித்து வருகிறார்கள்.
Video Courtesy – Sun tv