“ஐ அம் பேக்”!!திரும்பவும் வரும் நம் நாதஸ்வரம் கோபி (அ) திருமுருகன்!!அடுத்து தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியீடு.

இப்போது இருப்பது போல 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நிறைய டிவி சேனல்கள் கிடையாது. சிலது மட்டுமே இருந்தது. அதிலும் இப்போது இருக்கும் அளவிற்கு தோயல்கட்சி தொடர்கள் ஓடிக்கொண்டே இருக்காது. அப்போதைய காலகட்டத்திலேயே சன் டிவி மெகா சீரியலுக்கு மிக பிரபலம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக சித்தி, கோலங்கள் போன்றவை நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. இதற்கெல்லாம் ஒரு படி மேலாக ஓடிய தொடர்கள் என்றல் அது மெட்டி ஒலி, நாதஸ்வரம், குலதெய்வம், கல்யாண வீடு முதலான தொடர்கள். குறிப்பாக மெட்டி ஒலியும், நாதஸ்வரமும் பல ஆண்டுகள் மக்களிடம் பெரிய ஆதரவு பெற்று வெற்றிகரமாக ஓடியவை. அதனை இயக்கிய, அதன் மூலம் பிரபலமடைந்தவர் திருமுருகன்.

விளம்பரம்

இவரை திருமுருகன் என கூறுவதை விட நாதஸ்வரம் கோபி என கூறினால் இல்லத்தரசிகளுக்கு சட்டென இவருடைய முகம் ஞாபகம் வந்து விடும். அந்த அளவிற்கு அந்த தொடரின் மக்களிடம் பெரிய அறிமுகத்தை பெற்றார். இவர் கடைசியாக இயக்கிய தொடர் “கல்யாண வீடு”. இது சன் டிவியில் ஒளிபரப்பானது.

தொடர்புடையவை  அவசர கதியில் முடிந்த பாரதி கண்ணம்மா 2.! வேறு டிவிக்கு தாவிய முக்கிய நடிகை.! வீடியோ இதோ.!

"ஐ அம் பேக்"!!திரும்பவும் வரும் நம் நாதஸ்வரம் கோபி (அ) திருமுருகன்!!அடுத்து தொடரின் ப்ரோமோ வீடியோ வெளியீடு. 1

விளம்பரம்

இவர் இயக்கிய அனைத்து தொடர்களும் சன் டிவிலேயே ஒளிபரப்பானது. இப்பொது நிறைய தொடர்கள் பல்வேறான சேனல்களில் ஒளிபரப்பாகி வெற்றி பெறுவதால் மீண்டும் மக்களை தங்கள் தொலைக்காட்சியை பார்க்க வைக்க, சன் டிவி முயன்று வருகிறது. இப்பொது எடுக்கப்படும் தொடர்களில் கொஞ்சம் கிளாமர்களில் இறங்கி அடித்து பார்த்தும், ஒன்னும் ப்ரோஜனம் ஆகவில்லை.

இதனால் இப்பொது தங்களுடைய ஆஸ்தான டைரக்டரான திருமுருகனிடம் மீண்டும் ஒரு தடூரை தங்களுக்காக இயக்கி தரும்படி கேட்டுக்கொள்ள, அவரும் இப்போது அதற்குரிய வேளையில் இறங்கியுள்ளார். அந்த விஷயத்தை ஒரு ப்ரோமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

விளம்பரம்

இல்லத்தரசிகளின் பிடித்தமான இயக்குனர் மீண்டும் வருவதால், ரசிகர்கள் மத்தியில் இது நல்ல ஆர்வத்தை தூண்டியுள்ளது. மீண்டு மெட்டி ஒழி போல நல்லதொரு வெற்றியை இவர் பெறுவாரா? எனபதை கொஞ்சம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Video Courtesy – Thiru TV

விளம்பரம்

Leave a Comment