வருகின்ற ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது விக்ரம் படம். இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மூன்று வருடங்களாக கமலின் எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் விக்ரம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தை ஒரு ரசிகராக இருந்து இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்ற முண்ணனி நடிகர்கள் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டீசர், ட்ரைலர், ப்ரோமோ, பாடல்கள் என எல்லாமே அதிரடியாக உள்ளது.

நேற்று வெளியாகி இருந்த wasted என்ற பாடல் ஆங்கில வரிகளோடு ஹாலிவுட் ரேஞ்சில் இருந்தது. தற்போது சென்சார் போர்டில் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தமாக 13 காட்சிகளை நீக்கியுள்ளது சென்சார் போர்டு. முதலில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளில் வரும் கெட்ட வார்த்தைகளும் ம்யூட் செய்யப்பட்டுள்ளது. கால் துண்டித்து கீழே விழும் காட்சிகள், கத்தியால் குத்தப்படும் காட்சிகள், பாலியல் சம்பந்தமாக வரும் வரிகள் போன்றவை நேரம் குறைப்பு மற்றும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. Code Embed Credits: Trend Talks

குறிப்பாக பத்தல பத்தல பாட்டின் போதே ஒன்றியம் வார்த்தைக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தன. மத்திய அரசுக்கு எதிராக வரிகள் இடம் பெற்றுள்ளதால் பாடலை தடை செய்ய வேண்டும் என்று காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டன. தற்போது ஜிஎஸ்டி என்ற வார்த்தையும் சென்சார் போர்டு ம்யூட் செய்துள்ளது. இதே போல் கமல் நடுவிரல் காட்டும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. இது போல மொத்தம் 22 நிமிடங்கள் படத்தின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. மீதம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் படத்தின் மொத்த நீளமாக உள்ளது. படம் தயாரிப்பவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல், தங்களுக்கு எதிரான வசனங்களை நீக்குவது பற்றி தங்கள் ஆதங்கங்களை கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர். Watch the below Video..