Categories: சினிமா

முதல் நாள் வசூலிலேயே டானை பின்னுக்குத் தள்ளி கோடிகளை குவித்துள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம்.

வெளியிட்டது

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கியிருந்தார். ஏற்கனவே குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை தனுஷை வைத்து இயக்கியிருந்தார். அந்த வரிசையில் இந்த படத்தையும் மித்ரன் ஜவகரை இயக்க, படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் டிரைலர் வெளியான போது இந்த படம் ஒரு மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கையை கூறும் படம் என்று யூகிக்கப்பட்டது. அதேபோல் ஒரு மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களை கூறுவதாக இந்த படம் இருந்தது.

முதல் நாள் வசூலிலேயே டானை பின்னுக்குத் தள்ளி கோடிகளை குவித்துள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம். 1

 

படத்தின் பாசிட்டிவ் விஷயங்களாக பார்க்கப்படுவது, இந்த படம் ஏற்கனவே வெளியான விஐபி, யாரடி நீ மோகினி படங்களைப் போல் இருந்தது என்றாலும் வித்தியாசமான கதையைக் கொண்டிருந்தது. குறிப்பாக நித்யாமேனனின் கதாபாத்திரம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் நித்யா மேனன் போல் ஒரு தோழி இருந்தால் வாழ்க்கை மிக நன்றாக இருக்கும் என்று கூறும் அளவிற்கு சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். நேற்று வியாழக்கிழமை என்பதால் படத்தின் வசூல் குறைவாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி தமிழக முழுவதும் மட்டுமே ஒன்பது கோடி ரூபாய் வசூலை அள்ளி இருக்கிறது திருச்சிற்றம்பலம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெளியான படங்களில் வசூலை குவித்ததில் முதல் இடத்தில் வலிமையும், இரண்டாவது இடத்தில் பீஸ்ட்டும், மூன்றாவது இடத்தில் விக்ரம் உள்ளிட்ட படங்களும் இருக்கின்றன.

 

தமிழில் வெளியாகி முதல் நாளே வசூலை குவித்த படங்களின் பாட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. வலிமை – 36.17 கோடி
  2. பீஸ்ட் – 26.40 கோடி
  3. விக்ரம் – 20.61 கோடி
  4. எதற்கும் துணிந்தவன் – 15.21 கோடி
  5. ஆர்ஆர்ஆர் – 12.73 கோடி
  6. திருச்சிற்றம்பலம் – 9.52 கோடி
  7. டான் – 9.47 கோடி
Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்