நடிகர் அருள்நிதி நடித்துள்ள திருவின் குரல் திரைப்படம் பற்றி தற்போது பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறிவரும் நிலையில், ஒரு சிலர் படம் நன்றாக இல்லை, போர் அடிக்கிறது என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படமும் கலவையான விமர்சனங்களே பெற்றுள்ளது. நடிகர் அருள்நிதி சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பேய் படங்களுக்கு ராகவா லாரன்ஸ் என்பது போல் திரில்லர் படங்களுக்கு அருள்நிதி என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. டிமான்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், k13, ஆறாது சினம் போன்ற பல திரில்லர் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் அருள்நிதி. அந்த வரிசையில் தற்போது அவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் திருவின் குர.ல் இந்த படத்தில் வாய் பேச முடியாத காது கேளாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டி ப்ளாக், தேஜாவு, டைரி என்று தொடர்ந்து திரில்லர் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி தற்போது மருத்துவமனைகளில் நடிக்கும் மாபியா குறித்து பேசும் ஒரு கதையில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடிகை ஆத்மிகா, பாரதிராஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாரதிராஜாவின் மகனாக அருள்நிதி நடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருந்தார். ஹரிஷ் பிரபு என்கிற இயக்குனர் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் இருந்து டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. உடல்நிலை சரியில்லாத பாரதிராஜாவை மருத்துவமனைகளில் அனுமதிக்கிறார் அவரது மகன் அருள்நிதி. அப்போது அங்கு நடக்கும் த்ரில்லிங்கான கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் அருள்நிதி ஒருவருக்காக தான் இந்த படத்தை பார்க்க வந்தோம். படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் மருத்துவமனையில் 10 பேரை வைத்துக் கொண்டு இந்த படத்தையே முடித்து விட்டார். கதை ஒன்றும் பெரிய அளவிற்கு நன்றாக இல்லை என்ற ரீதியில் பலரும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலரோ படம் நன்றாக இருக்கிறது. மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல்களை அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். அருள்நிதி மற்றும் பாரதிராஜாவின் நடிப்பு மிக அருமையாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். இந்த படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. நீங்களும் அந்த விமர்சனங்களை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Friday Facts