வசமாக சிக்கிய 7 போட்டியாளர்கள்.! எஸ்கேப் ஆன 3 பேர்.! தாறுமாறாக நடந்த நாமினேஷன் ப்ரோஸஸ்.!

வெளியிட்டது

இந்த வாரம் நாமினேசன் பிராசஸ் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் மொத்தம் ஏழு பேர் நாமினேஷனில் இருக்கின்றனர். 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 தற்போது பத்து போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது இதுவரை மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி என மொத்தம் 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஜனனியின் வெளியேற்றம் நியாயமற்ற முறையிலும் நேர்மையற்ற முறையிலும் நடைபெற்றது என்று ஜனனியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வரும் நிலையில், தற்போது மொத்தம் ஏழு பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

வசமாக சிக்கிய 7 போட்டியாளர்கள்.! எஸ்கேப் ஆன 3 பேர்.! தாறுமாறாக நடந்த நாமினேஷன் ப்ரோஸஸ்.! 1
மணிகண்டன், ஏடிகே, அமுதவாணன் ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் நடந்த ஏஞ்சல் அண்ட் பேய்கள் டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அவர்கள் மூவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. மூவரும் நாமினேசன் ஃப்ரீ ஸோனில் இருக்கிறார்கள். மேலும் மணிகண்டன் இந்த வீட்டின் தலைவர் என்கிற முறையால் இந்த வாரம் அவரையும் நாமினேஷன் செய்ய முடியாது. எனவே மீதம் இருக்கும் ஏழு பேரில் மட்டும்தான் நாமினேஷன் நடக்க வேண்டும். அந்த ஏழு பேருமே நாமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமன், அசீம், தனலட்சுமி, ரட்சிதா, கதிரவன், மைனா மற்றும் ஷிவின் ஆகிய ஏழு பேரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். இந்த ஏழு பேருமே கடுமையான போட்டியாளர்கள் என்பதாலும், இவர்களுக்கு வெளியில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருப்பதாலும் இந்த முறை யார் வெளியேறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

மேலும் இந்த வாரம் தனலட்சுமி வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. பிக்பாஸ் தொடங்கிய நாள் முதல் சண்டை சர்ச்சரவு என தனலட்சுமி இந்த வீட்டை பரபரப்பாக வைத்திருக்கிறார். எனவே அவர் வெளியேறா விட்டால் அடுத்தபடியாக மைனா அல்லது கதிரவன் இருவரில் ஒருவரை வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த போட்டியாளர்களுக்கு நீங்களும் உங்களது வாக்குகளை அளிக்க விரும்பினால், நமது இணையதளத்தில் எடுக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு நீங்களும் வாக்களியுங்கள். லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்