Categories: சினிமா

நான் அடிச்சா நீ செத்துருவே..! THUGS LIFE படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்…! வெறித்தனமான அப்டேட்டை கொடுத்த படக்குழு..!

வெளியிட்டது

உலகநாயகனை தெரியாதவர்கள் சினிமா ரசிகர்களாகவே இருக்க முடியாது எனலாம், அந்த அளவுக்கு தனது நடிப்பால் மிகப்பெரிய இடத்தை சினிமாவில் பிடித்து இருக்கிறார் கமல்ஹாசன். பல வெற்றிப்படங்களை சினிமாவுக்கு கொடுத்து உலகநாயகனாக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த விக்ரம் பாடம் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது. தமிழ் சினிமா கீழே கிடந்த நாட்களில் வெளியான இப்படம் மீண்டும் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது.

நான் அடிச்சா நீ செத்துருவே..! THUGS LIFE படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய கமல்ஹாசன்...! வெறித்தனமான அப்டேட்டை கொடுத்த படக்குழு..! 1

நடிகர் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து உள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில், அந்த படம் நல்ல வரவேற்பினை பெரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்,தக்ஸ் லைப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இப்படத்தின் நடிகர் சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கி உள்ளதை அறிவித்து உள்ளது. இதனால் உலகநாயகன் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்