துணிவு படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை வைத்திருக்கிறார். இந்த பொங்கலுக்கு விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரு சேர வெளியாகி இருந்ததால். ரசிகர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தற்போது வழக்கம் போல தனது விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார். துணிவு படத்தைப் பொறுத்தவரை ஒரு வங்கியில் 500 கோடி பணத்தை பதுக்கி வைத்திருக்கின்றனர். இதை தெரிந்து கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று அந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக வங்கிக்குள் செல்கிறது. ஆனால் உள்ளே செல்லும் அஜீத் அந்த கொள்ளையர்களையும் தன் வசம் கொண்டு வந்து விடுகிறார். பின்னர் என்ன நடந்தது? அந்த பணத்தை மீட்டாரா இல்லையா என்பது குறித்த கதை தான் துணிவு. இந்த கதையை பொருத்தவரை முழு கதையைக் கேட்காமல் ஒரே சீனை மட்டும் கேட்டுவிட்டு படம் பண்ண ஹீரோ ஒத்துக் கொண்டதாக ப்ளூ சட்டை மாறன் கூறினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோர்வையாக படம் எடுப்பதை விட்டுவிட்டு, ஏதோ ஒரு படத்தை எடுத்து விட்டு பின்னர் அதை கோர்த்திருக்கிறார்கள். ஹீரோவிற்கு உப்பு சப்பு இல்லாத ஒரு பிளாஷ்பேக்கை கொடுத்திருக்கிறார்கள். மேலும் வங்கிக்குள் கொள்ளை அடிப்பதை விட்டுவிட்டு கிராமங்களில் நடக்கும் கிராம சபை கூட்டம் போல வங்கியில் மாட்டிக் கொண்டுள்ள பொதுமக்கள் அனைவருடைய குறைகளையும் ஹீரோ கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒருவன் மினிமம் பேலன்ஸ் இல்லாததால் தன்னுடைய பணத்தை திருடியதாகவும் இன்னொருத்தன் மியூச்சுவல் ஃபண்டில் பிராடு செய்து தன்னுடைய பணத்தை வங்கி திருடி விட்டதாகவும் கதை கதையாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பல இடங்களில் லாஜிக்கே இல்லை. ஆயிரம் பேர் சுடுகிறான், ஆனால் ஹீரோவிற்கு ஒரு குண்டு கூட படவில்லை. இலக்கே இல்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. நாமும் ஏதோ ஒரு விதியே என்று படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் வில்லனை அமர வைத்து பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவனும் கையை கட்டிக்கொண்டு அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
ஒரு படத்திற்கு ஹீரோ வலுவாக இருக்க வேண்டும் அல்லது வில்லன் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் இது போன்ற படங்களில் எதுவுமே இல்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல விமர்சனத்தில் எத்தனை முறை சொன்னாலும் இயக்குனர்கள் அதை காதில் வாங்குவதே இல்லை. தற்போது தியேட்டர் பக்கம் சென்றால் அவன் அவன் கைகளில் டிக்கெட்டை வைத்துக்கொண்டு பாதி விலைக்கு விற்றுக் கொண்டு திரிகிறான். அவனிடம் சென்று நீங்கள் விலை குறைத்து டிக்கெட்டை கேளுங்கள். அவன் தர மறுத்தால் இந்த டிக்கெட்டை வைத்து இரண்டாவது தடவையாக இந்த படத்தை பார் என்று கூறி பாருங்கள், அவன் உங்கள் கைகளில் டிக்கெட்டை கொடுத்து விட்டு ஓடியே விடுவான். ஒரு தராசில் இந்த இரண்டு படங்களையும் வைத்தால் இரண்டு படமும் சமமாக இருக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அஜித்தின் லுக்கு ஒரு அளவுக்கு ஓகே, அவரின் வில்லத்தனங்கள் நிறைந்த வசனங்கள் ஓகே. ஆனால் படத்தில் லாஜிக்கும் இல்லை ஒரு மேஜிக்கும் இல்லை. ரொம்ப கஷ்டம் என்று சொல்லி தனது விமர்சனத்தை முடித்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Talkies