நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் அர்ஜுன் தாஸும் காதலிப்பதாக தற்போது தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தனது instagram பக்கத்தில் அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஹார்டின் சிம்பலுடன. பகிர்ந்து இருக்கிறார். இதனால் இந்த தகவலை உறுதிப்படுத்தி நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். கைதி என்கிற படத்தில் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரது குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். முதன்முதலாக அர்ஜுன் தாஸ் 2012 ஆம் ஆண்டு ஒரு ஷார்ட் ஃபிலிம்-ல் நடித்தார். பின்னர் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது கைதிதான். அதற்குப் பிறகு இவர் அந்தகாரம், ஆக்சிஜன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் இன் கூட்டாளியாகவும் நடிதத்து இருக்கிறார் கும்கி பாகம் இரண்டிலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல நடிகர்களுக்கு பின்னணியும் பேசியும் வருகிறார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லனுக்கு அவர் பின்னணி பேசியிருக்கிறார். இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யா லட்சுமி அர்ஜுன் தாசுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஹார்டின் சிம்பலை போட்டு இருக்கிறார். தமிழில் விஷாலின் “ஆக்ஷன்” படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் பின்னர் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்த “கட்டா குஸ்தி” படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் கிறிஸ்டோபர், கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரியாக பூங்குழலி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது பலரையும் கவர்ந்திருந்தது. இதற்கு பின்னர் அவருக்கு ரசிகர்கள் பெருகினர்.

இந்த நிலையில் இன்று தனது instagram பக்கத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை லவ் எமோஜி உடன் பகிர்ந்திருந்தார். இந்த படத்தை பார்த்த பலரும் இருவரும் இணைந்து ஏதாவது புதிய படத்தில் நடிக்கிறார்களா? இல்லை இருவரும் காதலிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் பெரும்பாலானோர் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருந்த ஐஸ்வர்யா லட்சுமி தான் ஒரு Rugged Boy-ஐ திருமணம் செய்து கொள்ற விரும்புவதாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது..!
View this post on Instagram