தல நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கோடிகளில் வசூலை குவித்திருந்த துணிவு படத்திலிருந்து “சில்லா சில்லா” என்கிற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வரை 61 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்ததாக 62 ஆவது படமாக இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்த 61வது படமான துணிவு படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜயின் வாரிசும் தல அஜித்தின் துணிவும் நேரடியாக மோதியிருந்தது. இரண்டு படங்களும் சுமார் 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து புதிய சாதனையை படைத்திருந்தது. அஜித் மற்றும் எச் வினோத் மூன்றாவது முறையாக கைகோர்த்து இருந்தனர். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணி இணைந்திருந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது பல சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் அஜித் நேரடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இதனால் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே இருந்தது. மேலும் படத்திலிருந்து பாடல்கள் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றன. துணிவு பொங்கல் என்கிற ஹேஷ்டேகும் இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது. படம் வெளியான பின்பு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, படத்தை குடும்பம் குடும்பமாக சென்று மக்கள் ரசித்து வந்தனர். படம் வெளியாகி சுமார் இரண்டு மாதங்கள் நெருங்கி வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ஒவ்வொரு பாடலாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
அதில் முதல் பாடலாக தற்போது சில்லா சில்லா என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. துணிவு படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த பாடலை அனிருத் பாடியிருந்தார். வேதாளம் படத்தில் அனிருத் பாடிய ஆலுமா டோலுமா போலவே இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியான போது சுமார் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த பாடல் HD தரத்தில் வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
YouTube Video Code Embed Credits: Zee Music South