Categories: சினிமா

தமிழ்நாட்டில் ஓபனிங் கிங் என மீண்டும் நிரூபித்த அஜித்.! முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

வெளியிட்டது

வாரிசு துணிவு என்று இரண்டு படங்களில் நேற்று வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரைப்பட அனலிஸ்ட் ஆன ரமேஷ் பாலா இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் துணிவு படம் தமிழகத்தில் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் உலக அளவில் வசூலில் வாரிசு படம் துணிவை முந்தி இருக்கிறது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படமும், எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு படமும் உருவாகி இருந்தது. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி 11ஆம் தேதி நேற்று வெளியாகியிருந்தது. இரண்டு படங்கள் குறித்தும் அதன் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் பேட்டி கொடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தனர். மேலும் டிரெய்லர் வெளியானதால் இரண்டு படங்களுக்கும் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

தமிழ்நாட்டில் ஓபனிங் கிங் என மீண்டும் நிரூபித்த அஜித்.! முதல் நாள் வசூல் மட்டும் எத்தனை கோடி தெரியுமா? 1

ட்ரைலரை பார்த்தபோது துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக அடிப்படையாகக் கொண்டது என்றும், வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அதேபோல இரண்டு படங்களும் அந்த கதையவே அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் ரசிகர் சிலருக்கு இந்த இரண்டு படங்களின் மீதும் ஏமாற்றம் மிஞ்சி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் வசூல் குறித்து பிரபல திரைப்பட அனலிஸ்ட் ஆன ரமேஷ் பாலா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதன்படி அஜித்தின் துணிவு படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 19 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 17 கோடி வசூலை பெற்று வாரிசு இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.


மேலும் உலக அளவில் வாரிசு 26.5 கோடியை வசூலித்து முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. துணிவு 26 கோடியையும் வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கின்றது. உலக அளவில் வசூலில் வாரிசை ஒப்பிடும் போது துணிவு 50 லட்சம் வசூல் குறைவாக தான் பெற்றுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் துணிவு திரைப்படம் சுமார் $400K வசூலை பெற்று முதலிடத்தில் இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். கேரளாவில் தளபதியின் வாரிசு பாக்ஸ் ஆபிஸில் வசூலில் முதலிடத்தில் பிடித்திருப்பதாகவும், துணிவு படம் இரண்டாம் இடத்தை பெற்று இருப்பதாகவும் அவர் தனது பதிவில் கூறி இருக்கிறார்.  தமிழகத்தில் ஓப்பனிங் கிங் அஜித்குமார் தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்து இருப்பதாக ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பதிவில் அறிவித்திருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்