போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக பணிக்கு வரவேண்டுமென போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
திருத்தப்பட்ட உரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் சில போராட்டங்கள் வன்முறையாக மாறி உள்ளது. இதுவரை 16 பேர் காவல்துறையின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட தோறும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திமுக திங்கட்கிழமை அன்று அனைத்து கட்சிகளை ஒன்று திரட்டி பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தது. பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கட்சிகளைக் கடந்து அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க ஒன்றுபடுவோம் என திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக, போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை கட்டாயமாக பணிக்கு வரவேண்டுமென தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
காரணம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு பெரும் பலமாக அமைந்ததே போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் தான். இதனால் நிச்சயமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் எனக்கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.