Categories: சினிமா

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரிசை கட்டி நிற்கும் 8 படங்கள்.! என்ன என்ன படங்கள் ரிலீஸ் ஆகுது தெரியுமா?

வெளியிட்டது

நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர். வழக்கமாக தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த முறை விஜய், அஜித், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ், சிம்பு, விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சுமார் 8 படங்கள் வரை நாளை வெளியாக இருக்கிறது. தற்போது அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரிசை கட்டி நிற்கும் 8 படங்கள்.! என்ன என்ன படங்கள் ரிலீஸ் ஆகுது தெரியுமா? 1

எப்பொழுதும் பேய் படங்களை மையமாக வைத்து படம் எடுத்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது சற்று வித்தியாசமான முறையில் ருத்ரன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கியிருக்கிறார். இதன் மூலமாக அவர் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


இரண்டாவதாக அருள்நிதி நடித்திருக்கும் திருவின் குரல். இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமும் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். ஹரிஷ் பிரபு என்பவர் இந்த படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. காது கேளாத வாய் பேச முடியாத ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கும் அருள்நிதி தனது தந்தையின் உயிரை காப்பாற்ற போராடுகிறார்.மருத்துவமனையில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து இந்த படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக யோகி பாபு நடித்திருக்கும் யானை முகத்தான் திரைப்படம். இந்தப் படத்தில் யோகி பாபு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ரமேஷ் திலக், ஊர்வசி, ஹரிஷ் பிரதி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் யோகி பாபு விநாயகர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை மலையாள இயக்குனர் ரெஜிஸ் மிதிலா என்பவர் இயக்கி தயாரித்திருக்கிறார். பாரத் ஷங்கர் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நாளை இந்த படமும் வெளியாக இருக்கிறது.


மாஸ்டர் மகேந்திரன் மற்றும் காவியா அறிவுமணி ஆகியோர் நடித்திருக்கும் ஹாரர் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது ரிப்பப்பரி. இந்த படத்தை இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கியிருக்கிறார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் கார்த்தியே தயாரித்தும் இருக்கிறார். ஹாரார் கலந்த காமெடி ஜானரில் வித்தியாசமான முறையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் நாளை இந்த படத்திற்கான எதிர்பார்க்கும் அதிகமாக இருக்கிறது.


விஜய் ஆண்டனி நடித்திருக்கும் தமிழரசன் திரைப்படமும் பிச்சைக்காரன் 2 திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. தமிழரசன் திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் டிரைலர் பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் இதன் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது. நாளை படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து சுரேஷ்கோபி, யோகி பாபு, சோனு சூட், முனீஷ்காந்த் உள்ளிட்ட பல முண்ணனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


அடுத்ததாக விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படமும் நாளை வெளியாகிறது. 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன். தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பார், ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார்.பிச்சைக்காரன் முதல் பாகம் கொடுத்த பிரம்மாண்டமான வெற்றியால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. டீசர் ட்ரைலர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.


சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் நாளை வெளியாகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் புராண கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இயக்குனர் குணசேகரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் தேவ மோகன் நடித்திருக்கிறார். மையோ சிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவின் முதல் படம் வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.


கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி திரைப்படம் நாளை வெளியாகிறது. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து நடிகைகள் தீபா ஷங்கர், மற்றும் லட்சுமி பிரியா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். நடிகர் கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு காரை வாங்க வேண்டும் என்று கனவுகளுடன் இருக்கும் குடும்பத்திற்கு பரிசாக ஒரு கார் கிடைக்கிறது. பின்னர் அதை வைத்து என்னென்ன பிரச்சினைகள் நடக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு கதை நகரும் என்று தெரிகிறது. ட்ரைலர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

முண்ணனி நடிகர்களின் படங்கள் எதுவும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகாததால் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எட்டு படங்கள் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கின்றன. அதிக திரையரங்குகளில் வெளியாக இருந்த ருத்ரன் திரைப்படம் டப்பிங் பிரச்சனையால் ரிலீஸ் ஆவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், படம் வெளியாகுமா? ஆகாதா? என கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் தற்போது மீதமுள்ள படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா அல்லது எந்த வித சிக்கலும் இல்லாமல் நாளை ருத்ரன் படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்