விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ என்கிற பெயரில் சன் தொலைக்காட்சியில் புது நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் பங்கெடுத்த பல பேர் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சிக்கு சென்று இருக்கின்றனர். அதற்கான முதல் ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்த நிகழ்ச்சியாக மாற்றி மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசன்களை தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த சீசன் உடன் விலகுவதாக அறிவித்திருந்தார். விரைவில் புது நிகழ்ச்சியுடன் உங்களை சந்திப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் சன் தொலைக்காட்சியில் ‘டாப்பு குக்கு டூப்பு குக்கு’ என்கிற பெயரில் புது நிகழ்ச்சி ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.
அவருடன் இணைந்து ‘குக் வித் கோமாளி: நிகழ்ச்சியில் பிரபலங்களாக இருந்த ஜி பி முத்து, பரத், அதிர்ச்சி அருண், தீபா ஷங்கர், மோனிஷா, பரத்தின் தம்பி உள்ளிட்ட பலரும் புது நிகழ்ச்சியில் இணைந்து இருக்கின்றனர். அதற்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television