விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து தற்போது சன் தொலைக்காட்சியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்கிற ஷோ தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக குக் வித் கோமாளியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக அவர் பங்கேற்றிருக்கிறார். அதற்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

மேலும் அவருடன் மோனிஷா, ஜி.பி முத்து, கேபிஒய் தீனா, சூப்பர் சிங்கர் பரத், அதிர்ச்சி அருண் ஆகியோரும் பங்கெடுக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த சமையல் போட்டிக்கு நடிகர் வடிவேலு வர இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் போட்டியாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தி புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் பெப்சி விஜயன் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வந்திருக்கிறார்.
அவரைப் பார்த்த செஃப் வெங்கடேஷ் பட் “இவங்கள வச்சா ஷோ பண்ண போறோம்?” என்கிற கேள்வி உடன் தொடங்குகிறார். இந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the below Video.!
Youtube Video Embed Code Credits: Sun TV