விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்யா தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி செம மார்டனாக மாறியிருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு பல இல்லத்தரசிகளின் ஆதரவு இருந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் இல்லத்தரசிகள் படும் துன்பங்களை எடுத்துக்காட்டுவதால் இந்த நாடகத்திற்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். பெண்கள் மட்டும் இன்றி ஆண்கள், இளைஞர்கள் என அனைவரும் பார்த்து ரசிக்கும் ஒரு நாடகமாக இந்த நாடகம் இருந்து வருகிறது. தற்போது இந்த நாடகத்தில் பாக்யாவின் கணவர் தனது கல்லூரி கால தோழியை திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்து, தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். பாக்யா மீது இருந்த மனக்கசப்பு காரணமாக அவரது மகளும் தனது தந்தையுடனே சென்று அவரது வீட்டில் வசிக்கிறார், கோபியின் அப்பாவும் அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவன் பிரிந்து சென்ற பிறகு பெண்கள் மூலையில் முடங்கி கிடக்கத் தேவையில்லை. அவர்களால் வாழ்ந்து காட்ட முடியும் என்ற கதையை மைய கருவாகக் கொண்டு பாக்கியலட்சுமி தொடர் நடந்து வருகிறது. தற்போது வீட்டில் ஒற்றை ஆளாக இருந்து பணம் சம்பாதித்து கடனையும் அடைத்து குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் பாக்யா இருந்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது அவருக்கு பணம் சம்பாதிப்பதற்கு இருந்த அனைத்து வாய்ப்புகளும் பறிபோய்விட்டது. அதனால் அவர் தான் நடத்தி வரும் மசாலா கம்பெனி வாசலிலேயே ஒரு சிறிய கடை ஒன்றை போட்டு அதில் உணவுகளை விநியோகம் செய்து வருகிறார். அங்கும் அவருக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து குடும்பத்தை நடத்தி வருகிறார் பாக்யா. இது பல பெண்களுக்கும் உந்துதலாக இருந்து வருகிறது. ஆண்கள் துணை இல்லாமலும் வாழ முடியும் என்பதை பாக்கியலட்சுமி தொடர் சிறப்பாக காட்டி வருகிறது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் ஹேர் ஸ்டைலை மாற்றி செம மார்டன் ஆகவும் ஸ்மார்ட் ஆகவும் மாறி இருக்கிறார் பாக்கியலட்சுமி. இதை பார்த்த பலரும் கோபி இப்படி அவசரப்பட்டு விட்டீர்களே? பாக்யாவை பாருங்கள் எப்படி அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television