தமிழகம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில் பட குழுவினர் பிரமோஷன் செய்வதற்காக இந்தியா முழுமைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திரிஷா, ஜெயம் ரவி, கார்த்திக், சீயான் விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, மணிரத்தினம் என அனைவரும் சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர். நேற்று கேரளா சென்ற அவர்கள் இன்றைக்கு பெங்களூரு சென்றிருக்கிறார்கள். நாளை ஹைதராபாத்திற்கும், நாளை மறுநாள் மும்பைக்கும், அதற்கு அடுத்த நாள் டெல்லிக்கும் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போதைய காலகட்டத்தில் எவ்வளவுதான் பிரம்மாண்டமாக படம் எடுத்திருந்தாலும், ப்ரமோஷன் செய்யவில்லை என்றால் படம் சரியாக ஓடுவதில்லை. எனவே முன்னணி நடிகர்கள் பலர் தொடங்கி, சிறிய நடிகர்கள் வரை ப்ரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொன்னியின் செல்வன் பட குழுவும் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா மூவியாக வெளியாக இருப்பதால் படத்தின் பிரமோஷனை தற்போதே தொடங்கியிருக்கிறது படக்குழு. இந்த நிலையில் படத்திலிருந்து அவ்வப்போது சில வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து வருகிறது.
இன்று வெளியான வீடியோவில் பூங்குழலியான ஐஸ்வர்யா லட்சுமியும்,குந்தவையான திருஷாவும் படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் அங்கு குந்தவையும் நந்தினியும் செல்பி எடுத்துக் கொண்ட வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். பார்ப்பதற்கே மிக பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tips Tamil