இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கமலஹாசனும், இயக்குனர் சங்கரும் மீண்டும் இணைந்துள்ளனர். அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் பலியானார்கள். இதனால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமலே இருந்து வந்தது. கமலஹாசனும் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் பிக்பாஸிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்தியன் 2 குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது.

இந்த நிலையில் மீண்டும் இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்போது ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தில் நடித்ததற்காக கமலஹாசன் அவர்களுக்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டது. இதனால் இந்தியன் 2 எப்போது எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கமல் ரசிகர்களிடையே நிலவி வந்தது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த படத்தை தொடங்கப் போவதாக கமல் அறிவித்திருந்தார். ஆனால் இந்த படம் ஐந்து ஆண்டுகள் ஆகியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் சங்கர் தற்போது தெலுங்கு முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் கமலஹாசன் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார். இதனால் அவர் மீண்டும் இந்தியன் 2வை கையில் எடுத்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்சும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக முன்வந்துள்ளனர். இந்த நிலையில் கமலஹாசன் தனது twitter பக்கத்தில் இயக்குனர் சங்கரை செட்டில் வைத்து சந்திக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் ஷேர் செய்து இன்று முதல் இந்தியன் 2 துவங்குகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். முறுக்கு மீசையுடன் கமலஹாசனும், கதாநாயகியாக காஜலும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டனர்.
#Indian2 from today.
@Udhaystalin @shankarshanmugh @LycaProductions @RedGiantMovies_ pic.twitter.com/TsI4LR6caE— Kamal Haasan (@ikamalhaasan) September 22, 2022