Categories: சினிமா

தங்கள் தரிசனம் கிடைக்குமா தேவி..? ட்விட்டரில் குந்தவையுடன் cute ஆக Chat செய்த வந்திய தேவன்.!

வெளியிட்டது

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நேற்று முதல் சிங்கிள் பாடலான அகநக வெளியாகி இருந்த நிலையில் கார்த்தியும் திரிஷாவும் பேசிக்கொண்ட சாட் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். இது இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்த நிலையில் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சோழர்களின் பெருமையை எடுத்துரைக்கும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது. மேலும் 500 கோடி வசூலையும் குவித்து இந்த படம் சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று மக்கள் காத்துக் கிடந்த நிலையில் நேற்று மாலை முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தங்கள் தரிசனம் கிடைக்குமா தேவி..? ட்விட்டரில் குந்தவையுடன் cute ஆக Chat செய்த வந்திய தேவன்.! 1
முதல் பாகத்தில் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் அகநக என்ற இசை பலரின் மனம் கவர்ந்த இசையாக இருந்தது. தற்போது அதை முழு பாடலாக மாற்றி இரண்டாம் பாகத்தில் வைத்திருக்கின்றனர். அந்த பாடலை நேற்று முதல் சிங்கிள் பாடலாக வெளியிட்டிருந்தனர். இந்த பாடலைக் கேட்ட பின் இந்த படத்திற்கு இசையமைத்த ஏ ஆர் ரகுமானை பலரும் புகழ்ந்து தள்ளத் தொடங்கினர். இரண்டாம் பாகத்தில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அப்டேட்டுகள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. விரைவில் அடுத்தடுத்த பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் வந்திய தேவனாக நடிகர் கார்த்திக்கும் குந்தவையாக த்ரிஷாவும் நடித்திருக்கின்றனர். மேலும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமனும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று கார்த்தி ட்விட்டரில் திரிஷாவிடம் ஹாய் இளைய பிராட்டி என்று பதிவிட நீண்ட நேரமாக த்ரிஷா பதிலளிக்காமல் இருந்தார். பின்னர் மீண்டும் என்ன பதிலே இல்லை என்று அடுத்த வீட்டை போட்டு த்ரிஷாவை டேக் செய்திருந்தார் கார்த்தி.


அதற்கு பதில் அளித்த திரிஷா என்ன வாணர் குல இளவரசே என்று கேட்டார். அதற்கு தங்களது தரிசனம் கிடைக்குமா? என்று கேட்டார் கார்த்தி. யோசித்து சொல்கிறேன் என்று கார்த்திக் ட்வீட்டுக்கு ரிப்ளை செய்திருந்தார் திரிஷா. அதற்கு பதில் அளித்த கார்த்தி கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றி வந்த எனக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விட மாட்டீர்களே என்று கிண்டலாக கேட்க, வேறென்ன வேண்டும்? கொடுத்த பொருளை திருப்பி கேட்கப் போகிறீர்களா? என்று த்ரிஷா ரிப்ளை செய்திருந்தார். அதற்கு ஐயோ உயிர் என்றுமே உங்களுடைய தேவி நாம் பழையாறை வந்ததும் Vibe செய்ய ஒரு பாடல் தயாரிக்க சொல்லுங்களேன் என்று கார்த்தி கூற, பாடல் எப்பொழுதோ ரெடி ஆறு மணி வரை காத்திருங்கள் என்று த்ரிஷா பதிலளித்திருக்கிறார். இவர்கள் இவ்வாறு உரையாடிக் கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்