நடிகர் ஜெயம் ரவி வீட்டில் நடந்த ஒரு பூஜையின் போது, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, ஜெயம் ரவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதும், பின்னர் தனது மனைவியின் தாலிக்கு ஜெயம் ரவி குங்குமம் வைத்துவிட்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தமிழில் ஜெயம் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ரவி. இவரின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சினிமா துறையைச் சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

42 வயதாகும் ஜெயம் ரவி முதலில் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2003 ஆம் ஆண்டு அவர் ஜெயம் என்கிற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் அடித்து வைத்தார். அதன் பின்னர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தில்லாலங்க,டி எங்கேயும் காதல், கோமாளி, அடங்கமறு போன்ற பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் அருள்மொழிவர்மன் என்கிற ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்து பலரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. தற்போது பொன்னியின் செல்வன் பாகம் இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் இறைவன், அகிலன், சைரன் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளில் 25க்கும் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

அதற்கு காரணமாக அவர் கூறியது, “அனைத்து கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்க விருப்பமில்லை, கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்” என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நல்ல கதையம்சத்துடன் கூடிய கதைகளில் மட்டுமே நடித்து வருவதால் ஜெயம் ரவிக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு 2009 ஆம் ஆண்டு திருமணமானது. ஆர்த்தி என்பவரே அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். முதல் மகன் பெயர் ஆரவ், இரண்டாவது மகன் பெயர் அயான். இதில் ஆரவ் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். அழகான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வரும் ஜெயம் ரவி வீட்டில் தற்போது ஒரு பூஜை நடந்திருக்கிறது. அந்த புகைப்படங்களை தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஜெயம் ரவி பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் இருக்கிறார். ஆர்த்தியும் பட்டுப் புடவையில் இருக்கிறார்.

பூஜை முடிந்த பின் ஜெயம் ரவி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்கிறார் ஆர்த்தி. பின்னர் அவரது தாலிக்கு குங்குமம் வைத்து விடுகிறார் ஜெயம் ரவி. இந்த புகைப்படங்களை ஆர்த்தியே தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதில் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக நடிகை குஷ்பூவும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெயம் ரவி, ஆர்த்தியை வாழ்த்தியிருக்கிறார்.